Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
கோடையில் குழந்தையை கூலாக வைப்பதற்கு சில டிப்ஸ்...
குழந்தைகளைப் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதிலும் கோடைகாலம் ஆரம்பித்து விட்டால், அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் குழந்தைகள் பிறப்பதற்கு முன் கருப்பையில் குளிர்ச்சியான இடத்தில் இருந்ததால், கோடைகாலத்தில் இருக்க முடியாது. அவர்களுக்கு எப்போதும் அதிக வெப்பம் ஆகாது. ஆகவே கோடைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது என்றால், அதற்கு முன்னரே குழந்தைகளை குளிர்ச்சியுடன் வைப்பதற்கு சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அதிகம் வியர்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்களுக்கு வேண்டிய சூழ்நிலையை வீட்டிற்குள்ளேயே ஏற்படுத்தி தருவதோடு, ஒருசில செயல்களையும் மேற்கொள்ள வேண்டும். சரி, இப்போது குழந்தைகளை கோடைக்காலத்தில் குளிர்ச்சியுடன் வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

* தற்போது சூரியக் கதிர்களின் தாக்குதல் அதிகப்படியாக இருப்பதால், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதிய வேளையில் அழைத்து செல்வதை அறவே கூடாது.
* குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது, நல்ல காற்றோட்டமாக இருக்கும் குழந்தைகளை வைத்து தள்ளிக் கொண்டு செல்லும் தள்ளுவண்டியைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் இவ்வாறு தள்ளுவண்டி வாங்கும் போது, குழந்தைகளை இறுக்குமாறு இல்லாமல், சற்று இடம் அதிகமாக இருக்கும் வகையில் வாங்குவது நல்லது. அதிலும் எடைகுறைவாக உள்ள நைலானால் செய்யப்பட்ட தள்ளுவண்டியை பயன்படுத்துவது நல்லது.
* கோடை காலத்தில், அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் வறட்சியானது அதிகமாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு அவ்வப்போது அதிகப்படியான தண்ணீரைக் கொடுத்து வர வேண்டும். இதனால் உடல் வறட்சியை நீக்கலாம்.
இவையே குழந்தைகளை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான சில எளிமையான வழிகள்.



Click it and Unblock the Notifications
