Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா?

எனக்கு பசிக்குதும்மா
நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு பசி உணர்வு வந்தால் லேசாக சிணுங்கும். அம்மா அருகில் இருந்தால் உடனே தட்டிக்கொடுத்து உறங்க வைத்து விடுவார் இல்லையெனில் பசியறிந்து பாலூட்டுவார். அருகில் இல்லாமல் ஏதாவது வேலையாக இருக்கும் பட்சத்தில் அம்மாவிற்கு தனது நிலையை உணர்த்த குழந்தை கத்தி அழும் அதை வைத்து உணர்ந்து கொள்ளலாம்.
என்னை தூக்கும்மா
பசியையும் தாண்டிப் பல காரணங்களுக்காகவும் குழந்தை அழக்கூடும். குழந்தை அழத் தொடங்கினால், முதலில் கைகளில் தூக்கிக் குழந்தையைப் பரிசோதித்துப் பாருங்கள். கைகளில் தூக்கியவுடனேகூட சில குழந்தைகள் அழுகையை நிறுத்திவிடும். சில சமயங்களில் குழந்தையிடம் பேசவோ அல்லது சிரிக்கவோ செய்தால், குழந்தை சமாதானமாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
காது வலி - வயிற்று வலி
குழந்தைகளுக்கு வயிற்று வலியும் காது வலியும் சகஜமாக ஏற்படும். தன்னுடைய காலை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்று வலி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன் ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கி தோளில் போட்டு அதன் முதுகைத் தட்டிக்கொடுக்கலாம். இதனால் குழந்தையின் வயிறு தோள்பட்டையில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும்.
சில சமயங்களில் குழந்தையின் குடல் பின்னிக்கொள்ளக் கூடும். இதனால் குழந்தைக்கு வயிறு வீங்கி, வலி தாங்காமல் அழும். குழந்தையின் மலத்தில் ரத்தம் கலந்து வரும். கூடவே வாந்தியும் எடுக்கும். குடல் சில சமயங்களில் ஒன்றோடு ஒன்று முடிச்சு விழுந்ததுபோல மாட்டிக்கொள்ளும். இடுப்பின் முன் பகுதியில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். வலி ஏற்பட்டு குழந்தை அழும்.
காதின் உட்பகுதிக்குள் ‘மிடில் ஏர்' என்ற ஒரு குழாய் பகுதி இருக்கிறது. இதில் ஏதாவது சீழ்க்கட்டிகள் இருந்தால்கூட, குழந்தைகளுக்குக் காது வலி ஏற்படும். காதுப் பகுதியைத் தொட்டால், அதிகமாக அழும்.
பூச்சி கடிச்சிருக்கா ?
தன்னுடைய உடலில் ஏதேனும் ஊர்வதுபோல உணர்ந்தால், குழந்தைகள் அழலாம். எறும்புகள் போன்ற பூச்சிகள் கடித்தாலோ, சீறுநீர் கழித்து இருந்தாலோ, அதைத் தெரியப்படுத்தவும் அழலாம். குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை காரணமாக சில சமயம் சிவந்த தடிப்புகள் உருவாகும். ஏழு நாட்களுக்குள் இது குணமாகிவிடும். ஆனால் தடிப்புகளோடு சேர்ந்து குரல் நாணையும் ஒவ்வாமை தாக்கி இருந்தால், சரியாக மூச்சுவிட முடியாமல் குழந்தை அழும். குழந்தை அழும் சத்தத்துடன் குரலும் மாறுபட்டிருக்கும்.
சளி தொந்தரவு
கபம் என்கிற சளி பொதுவாக மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும். இதில் மூக்கில் மட்டும் நீர் வடிந்துகொண்டு இருந்தால், பயப்படத் தேவை இல்லை. ஆனால் சளியோடு சேர்ந்து மூச்சிரைப்பும் இருந்தால், நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை அறியலாம். குழந்தை பால் குடிக்க முடியாமல் அழுதுகொண்டே இருக்கும்.
சுளுக்கு விழுந்திடும்
ஆறு மாதம் வரையிலும் குழந்தையின் கழுத்துப் பகுதியில் நல்ல பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும். இல்லையெனில், குழந்தையின் கழுத்துப் பகுதியில், சுளுக்கு ஏற்பட்டு வலி வரலாம். இதற்கு சுய மருத்துவம் செய்யக் கூடாது; உடனடியாக உரிய மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்றுக்கொள்வதுதான் சரியானத் தீர்வு.
தண்ணீர் வற்றிப்போகும்
வயிற்றுப்போக்கு காரணமாக, இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் குழந்தை மலம் கழித்தால், குழந்தையின் உடலில் நீர் அதிகமாக வெளியேறிவிடும். இதனால், தாகம் அதிகரித்துக் குழந்தைக்கு நாக்கு வறண்டு அழும். மருத்துவரைப் பார்க்க வருவதற்குள் உப்பு சர்க்கரைக் கரைசலைத் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.



Click it and Unblock the Notifications