For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலா? உடனே கவனிங்க!

By Mayura Akilan
|

Home Remedies for Pneumonia in Children
கடுமையான காய்ச்சல், மூச்சுவிட சிரமம் என குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவது நிமோனியா. நுரையீரல்களில் ஏற்படும் இந்த நோய்க்கு நவீன மருத்துவ சிகிக்சையோடு இயற்கை முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

நிமோனியா அறிகுறிகள்

நெஞ்சில் குத்துவது போல் வலி, தலைவலி, கடுமையான காய்ச்சல், ஜலதோஷம், தலை - தொண்டை ஜில்லென்று இருத்தல் ஆகியவை நிமோனியா காய்ச்சலில் அறிகுறி. இந்நோய் இருந்தால் சளி பழுப்பு அல்லது துருப்பிடித்த இரும்பு போன்ற நிறத்தில் இருக்கும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும்.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படும் பட்சத்தில் தொடர் இருமல் ஏற்படும். தாய்பால் குடிக்க விரும்ப மாட்டார்கள். மூச்சுவிட சிரமப்படுவார்கள். சருமம் நீல நிறத்தில் மாறலாம்.

ஒருவருடத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிறு வலி, வாந்தி ஏற்படும். இருமல் நுரையீரல் தொடர்பான பிரச்சினை அனைவருக்கும் ஒரேமாதிரிதான் இருக்கும்.

சுடுநீர் ஒத்தடம்

நிமோனியோ காய்ச்சலை தணிக்க வெந்நீர் ஒத்தடம் தரலாம். பாட்டிலில் வெந்நீரை ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் குழந்தையின் நெஞ்சுப்பகுதியில் ஒத்தடம் தரலாம். இதனால் நுரையில் பகுதியில் சளி இருந்தால் அது வெளியேறும். மூச்சுவிடுவதில் உள்ள சிரமம் நீங்கும்.

கடுகை அரைத்து நெஞ்சுப் பகுதியில் பற்றுப் போடலாம். ஒருசில குழந்தைகளுக்கு கடுகுப் பற்று அலர்ஜியை ஏற்படுத்தினால் அதை உடனே அகற்றிவிடவேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

மணல்வாரி, கக்குவான், இருமல், ப்ளு, ப்ராங்க் டைஸ், ஆஸ்துமா ஆகிய நோய்களைத் தொடர்ந்து இந்த நோய் ஏற்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய் இது. எனவே, சுகாதாரமும், கவனமும் முக்கியம்.

குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ நோய் எதிர்ப்பு சக்தி குறைவதினால்தான் எந்த வித நோய்களும் எளிதில் தாக்குகின்றன. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தான பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள் போன்றவைகளை உண்ணத்தரவேண்டும்.

வருமுன் காப்போம்

எந்த ஒருநோயுமே வருமுன் தடுப்பதுதான் நல்லது. நிமோனியாவும் நம்மை அண்டாமல் தடுக்கமுடியும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். அதற்கு வீட்டிலேயே மருந்திருக்கிறது.

வெள்ளைப் பூண்டு, வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி, நல்லெண்ணெய், ஆரஞ்சு, ஆப்பிள், காரட் முதலியவற்றை அவ்வப்பேது சேர்த்து வந்தால் போதும். இதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.இந்த எதிர்ப்புச் சக்தி மற்ற நோய்களையும் எதிர்க்கும்.

சத்தான பழச்சாறுகள்

பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடனேயே முதல் மூன்று நாட்கள் ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாம்பழம், சாத்துக்குடி, தக்காளி, பப்பாளி - இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து சாறாக அருந்த கொடுக்க வேண்டும். ஒரு கப் சாறு என்றால் அதே அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மொத்தம் ஐந்து வேளைகள் தினமும் பழச்சாறாக கொடுக்கவேண்டும். பிறகு ஒரு வாரம் பழங்கள், காய்கறிகள், முளைவிட்ட தானியங்கள் முதலியவற்றைச் சாப்பிட வேண்டும்.

இப்படிச் செய்தால் நிமோனியாக் காய்ச்சல் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் டீ, காபி, எண்ணெயில் பொறித்த ஸ்நாக்ஸ் எதையும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

இஞ்சி, எலுமிச்சை சாறு

பெரியவர்களுக்கு நிமோனியா காய்ச்சல் வந்துவிட்டால் இஞ்சிச் சாறு எலுமிச்சை சாறு இவற்றில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தவும் அல்லது வெள்ளைப் பூண்டு, வெங்காயம் இவற்றைச் சாறாக்கி அருந்தவும். மூன்றாவதாக, துளசிச் சாறு, ஆரஞ்சுச் சாறு, காரட் சாறு இந்த மூன்றையும் மாற்றி மாற்றி அருந்தவும்.

எள்ளுருண்டை

நிமோனியா காய்ச்சலை கட்டுப்படுத்த எள்ளுருண்டை சாப்பிடலாம் அல்லது எள்விதைகளைக் கஷாயம் வைத்து இறக்கி, ஆறியதும் உப்பும் தேனும் சேர்த்து அருந்தலாம்.

தினமும் நான்கு வேளை வெந்தயக் கசாயம் அருந்த வேண்டும். விரும்பினால் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.வெந்தய விதைகள் உடலில் நன்கு வியர்வையை உண்டு பண்ணி விஷப் பொருட்களை வெளியேற்றி விடும். இப்படிச் செய்தால் நிமோனியாக் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். காய்ச்சல் குறையக் குறைய வெந்தையக் கசாயத்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு நோய்க்குமே மருந்து உண்டு. நம் வீட்டில் உள்ள பொருட்களியே அதற்கான நிவாரணமும் உண்டு. எனவே சத்தான, சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary

Home Remedies for Pneumonia in Children | குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலா? உடனே கவனிங்க!

Pneumonia is a lung infection that can be caused by a variety of pathogenic organisms. Pneumonia in children used to be common enough that nearly every family had some experience with it, but in the modern era pneumonia is relatively rare.
Story first published: Monday, April 16, 2012, 11:08 [IST]
Desktop Bottom Promotion