Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம்

ஃபோலிக் அமிலம் என்பது கர்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. அதனால்தான் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே முதலில் ஃபோலிக் அமிலம் அடங்கிய மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர்.
கர்பிணிகளுக்கு அவசியம்
கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், தாயின் இரத்த அளவு அதிகரிக்கவும் ஃபேலிக் அமிலம் அதிகமாகத் தேவைப்படுகிறது. பி வைட்டமின்களில் ஒன்றான இந்த ஃபோலிக் அமிலம் டி.என்.ஏ வளர்ச்சிக்கு அவசியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் நரம்பு மண்டல குறைபாடு இன்றி இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவேதான் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் நிறைந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சத்தான உணவு
மாத்திரைகள் தவிர ஃபோலிக் அமிலம் நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது தாய், சேயின் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். பச்சைக் காய்கறிகள், கீரைகள், ஈரல்கள், ஈஸ்ட், அவரை, மொச்சைகள், கொட்டைகள், முழு தானியங்கள் ஆகியவை போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுப் பொருட்களாகும். இவைகளில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளையும், உணவுகளையும் சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம். அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications
