Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால்

தாய்க்கும் சேய்க்கும் இடையேயான பாசத்தை அதிகரிப்பது தாய்ப்பால். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முதல் முறை கொடுக்கப்படும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் காணப்படுகிறது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் இதில் அடங்கியுள்ளன. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் இதற்குக் காரணம் அதில் அடங்கியுள்ள கொழுப்பு அமிலங்கள்தான்.
தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது.
யுனிசெப் நிறுவனம் உலகம் முழுவதும் ஆய்வு நடத்திய கணக்கெடுப்பின் படி, உலகம் முழுவதும் 13 கோடியே 67 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன என்றும், இதில் 32.6 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே "ஆறு மாதம் தொடர்ந்து தாய்ப்பால் வழங்கப்பட்டுள்ளது' எனவும் தெரிய வந்துள்ளது. மேலை நாடுகளின் பெரும்பாலான பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர விரும்புவதில்லை. இதேபோல் இந்தியாவில் உள்ள இளம் தாய்மார்களும் அழகை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை சிலவாரங்களிலேயே நிறுத்திவிடுகின்றனர் என்பது வேதனைக்குறியது. எனவே குழந்தைகளுக்க தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம், சர்வதேச தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications