Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
உங்க குழந்தைக்கு ஒரு வயசு ஆகுதா? அப்போ இந்த விஷயங்களை ஒருபோதும் செஞ்சுடாதீங்க...
Baby Care Tips In Tamil: குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிலும் பிறந்த குழந்தை என்றால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நிறைய மெனக்கெடல்களை நாம் செய்ய வேண்டியிருக்கும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை சில விஷயங்களை செய்யக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
குழந்தைக்கு உணவில் அதிகமாக சர்க்கரை சேர்ப்பது, ஒரு வயது ஆகும் முன்பு தேன் கொடுப்பது, தாய்ப்பால் கொடுக்காமல் பசும் பால் கொடுப்பது போன்ற தவறான விஷயங்களை செய்வது குழந்தையின் உடல்நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் குழந்தை நல மருத்துவர்கள். எனவே குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

குழந்தையின் உணவில் சர்க்கரை சேர்ப்பது
பிறந்த குழந்தைக்கு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகளவில் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக குழந்தையின் சர்க்கரைத் தேவையை கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் மற்றும் பழங்கள் போன்ற இயற்கையான இனிப்பு உணவுகள் மூலம் பூர்த்தி செய்யலாம். ஒரு வருடத்திலயே உங்கள் குழந்தையின் உணவில் அதிகளவு சர்க்கரையை சேர்த்தால் பல் சொத்தை, உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் சோர்வு போன்ற கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும்.
அதிகளவு உப்பை சேர்ப்பது
பல்வேறு சுகாதார அமைப்புகளின் கூற்றுப்படி, குழந்தைக்கு 6 மாதங்கள் வரை உணவில் உப்பை சேர்க்கக் கூடாது. குழந்தைக்கு தேவையான சோடியம் தேவை தாய்ப்பாலின் வழியே பூர்த்தி செய்யப்பட்டு விடும் 6 மாதங்கள் முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 0.4 கிராம் சோடியம் தேவை போதுமானது.
ஒரு கிராமுக்கு மேல் உப்பைக் கொடுக்கக் கூடாது. குழந்தைக்கு உணவில் அதிகமான உப்பு சேர்த்து வந்தால் சிறுநீரகக் கற்கள், உயர் இரத்த அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு, எலும்புகள் உடையக் கூடிய பிரச்சினைகள் ஏற்படும். இதனால் நீங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.
குழந்தையின் உணவில் தேன் சேர்ப்பது
ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைக்கு கட்டாயம் தேனைக் கொடுக்கக் கூடாது. இது குழந்தையின் போட்யூலிசத்திற்கு வழி வகுக்கிறது. இது குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது. குழந்தை போட்யூலிசம் என்பது ஒரு கொடிய நோயாகும்.
இந்த நோய் குழந்தை ஆபத்தான பாக்டீரியாக்களை உட்கொள்வதால் ஏற்படுகிறது. ஒரு வயது குழந்தைக்கு செரிமானம் சரியாக வளர்ச்சியடைந்து இருக்காது. இதனால் அக்குழந்தையால் அந்த பாக்டீரியாக்களை செரிமானம் செய்ய இயலாது.
பசும் பால் கொடுப்பது தீங்கு விளைவிக்கும்
ஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைக்கு பசும்பால் கொடுப்பது தீங்கு விளைவிக்கும். பசும் பாலில் குழந்தைக்கு தேவையான வைட்டமின் ஈ, இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இருப்பதில்லை. மேலும் பசுவின் பாலில் அதிகளவு புரதம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.
பழச்சாறுகள் கொடுக்கக்கூடாது
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பழச்சாறுகள் எதுவும் வழங்கக்கூடாது. பழச்சாறுகள் எந்த வித ஊட்டச்சத்துக்களையும் குழந்தைகளுக்கு வழங்குவதில்லை. தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. புரதம், கொழுப்புகள், தாதுக்கள் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. பழச்சாறுகள் அதிக சர்க்கரை மற்றும் அதிக கலோரிகளைக் கொண்டது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைக்கு கொடுக்காதீர்கள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தைக்கு எப்பொழுதும் மோசமான விளைவுகளை உண்டாக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகளவு காணப்படுகிறது. இதனால் உணவு விஷமாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்காதீர்கள்.
காப்ஃபைன் பானங்களை கொடுக்காதீர்கள்
சிலர் ஒரு வயதிற்குள் குழந்தைக்கு காபி மற்றும் தேநீர் பானங்களை கொடுக்கின்றனர். இது குழந்தைக்கு சில நேரங்களில் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக் கூடும். காப்ஃபைன் பானங்கள் குழந்தைக்கு நீரிழப்பை ஏற்படுத்தும். சிறிய அளவிலான காப்ஃபைன் கூட குழந்தையின் இதயத்தை வேகமாக துடிக்கச் செய்து படபடப்பு மற்றும் மோசமான தலைவலியை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
குழந்தைக்கு சோயா பாலை கொடுக்காதீர்கள்
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சோயா பால் கொடுக்கக் கூடாது. ஏனெனில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் சோயா பாலில் இல்லை. உங்கள் குழந்தைக்கு சோயா பாலை கொடுப்பது வைட்டமின் பற்றாக்குறையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது.
பழங்களை முழுதாக கொடுக்க வேண்டாம்
திராட்சை, வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற பழங்களை குழந்தைகளுக்கு முழுதாக சாப்பிட கொடுக்காதீர்கள். ஏனெனில் குழந்தைகளுக்கு பெரிய துண்டுகளாக விழுங்க தெரியாது. பெரிய துண்டுகள் குழந்தையின் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இது குழந்தைக்கு கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
அதிகப்படியான ஆடைகளை குழந்தைக்கு அணிய வேண்டாம்
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (AAP) படி, அதிக சூடான ஆடைகள் மற்றும் அதிகமான போர்வைகள் திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி (SIDS) அபாயத்தை அதிகரிக்கின்றன. குழந்தை அதிகமாக வெப்பமடைந்தால் துணிகளை விலக்கி காற்றோட்டமாக வைத்து இருங்கள். கீழ் வயிறு மற்றும் மார்பு போன்ற இடங்களில் எவ்வளவு வெப்பநிலை உள்ளது என்பதை கண்காணியுங்கள்.



Click it and Unblock the Notifications

