Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
800 மாவட்டங்கள் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா? -
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்!
கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை?
கிரிப்டோ கரன்சி சந்தை வீழ்ச்சி அடைந்து வரக்கூடிய சூழலில் இது சர்வதேச அளவில் மீண்டும் தங்கத்தின் விலையை உயர்த்துமா என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ச்சி அடைந்த கிரிப்டோ சந்தை தற்போது அதைவிட வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.
மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படும் கிரிப்டோ நாணயமான பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டு வரலாற்று உச்சத்தை தொட்டது. ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பில் 1 கோடி ரூபாயை கடந்தது. ஆனால் தற்போது அது 77 லட்சம் ரூபாய்க்கு வந்து விட்டது . கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திலேயே பிட்காயின் மதிப்பு 25 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது.

கடந்த ஆறு வாரங்களில் கிரிப்டோ சந்தையில் இருந்து 1.2 லட்சம் டிரில்லியன் டாலர் பணம் மாயமாகி இருக்கிறது. பிட்காயின் , எரித்திரியம் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பும் குறைந்து வருகிறது . கிரிப்டோ சந்தை சரிவடைய தொடங்கியதால் சந்தை கரடியின் பிடியில் சென்றுவிட்ட அச்சத்தில் ஏராளமானவர்கள் கிடைத்த லாபம் வரை போதும் என தங்களுடைய முதலீடுகளை விற்பனை செய்தனர் .
பிட்காயினில் முதலீடு செய்து இருந்த முன்னணி முதலீட்டாளர்கள் பலரும் தாங்கள் அவற்றை விற்பனை செய்து விட்டதாக வெளிப்படையாகவே அறிவித்தனர். 2025 ஆம் ஆண்டு பெருமளவில் பிட்காயின் முதலீட்டில் லாபம் பார்த்தவர்கள் அனைவரும் தற்போது நஷ்டத்தில் இருக்கிறார்கள் .இந்த சூழலில் கிரிப்டோ கரன்சி சந்தையின் வீழ்ச்சி தங்கத்தின் விலையை உயர்த்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஏற்கனவே தங்கம் தன் வரலாற்று உச்சத்தை எட்டி விட்டது .அமெரிக்க வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவிழுந்தது ,கோல்டு ஈடிஎஃப் முதலீடுகள் அதிகரித்தது, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கியில் அதிகமாக தங்கத்தை வாங்கியது ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தன.
பிட்காயினில் இருந்து பணத்தை எடுத்தவர்கள் தங்கத்தின் பக்கம் திருப்பினால் தங்கம் விலை உயரும். ஆனால் முதலீட்டாளர்கள் தற்போது பிட்காயினில் தங்களுக்கு கிடைத்த லாபத்தை ரியல் எஸ்டேட் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கின்றன இதன் காரணமாக உடனடியாக தங்கத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன?
எனவே தங்கம் உடனடியாக ஒரு புதிய உச்சத்துக்கு செல்வதற்கு வாய்ப்பு குறைவு என்றும் கூறுகின்றனர். ஆண்டு இறுதிக்குள் முதலீட்டாளர்கள் இன்னும் லாபம் எடுக்க பார்ப்பார்கள் என்பதால் தங்கத்தின் விலை பெரிய அளவில் உயர்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கூறுகின்றனர். புது ஆண்டில் தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என தெரிவிக்கின்றனர்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications