Latest Updates
-
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா?
துண்டு சீட்டில் பறந்த "திமுக சப்போர்ட்".. தென் ஆற்காடு மாவட்டத்துக்கு பிரேமலதா போட்ட பக்கா ஸ்கெட்ச்
கடலூர்: கடலூரில் இன்று நடக்கும் தேமுதிக மாநாடு , தற்பொழுது தமிழகத்தின் பரபரப்பான அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. எனினும் ராஜ்சபா சீட் வழங்கப்படாத அதிருப்தி தேமுதிகவுக்கு இருக்கவே செய்கிறது.. அந்தவகையில் இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.. மற்றொருபுறம் கடலூரில் இந்த மாநாட்டை தேமுதிக நடத்தும் நோக்கம் என்ன? அது நிறைவேறுமா? என்ற ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிக அரசியலில் ஓரங்கட்டப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், சமீபகால நிகழ்வுகள் அந்த பார்வையை மாற்றியுள்ளன. பிரேமலதா விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததும், விஜயகாந்தின் நினைவு நாள் நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றதும் அரசியல் கவனம் பெற்றது.

அதேபோல், தேமுதிகவை என்டிஏவில் இணைக்க பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.நடிகர் விஜய் தொடர்ந்து விஜயகாந்தை நினைவுகூரும் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதும் கவனிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகள் மூலம் தேமுதிக இன்னும் அரசியல் மதிப்பை இழக்கவில்லை என்பது தெளிவாகிறது.
பலம் வாய்ந்த கட்சியா தேமுதிக
அதாவது தேமுதிக பலம் வாய்ந்த கட்சியா என்பதைவிட, அது எந்த கூட்டணியில் இணையும் என்பதே முக்கியமாக பார்க்கப்படுகிறது. திமுக தலைமையிலான ஆளும் கூட்டணிக்கும், அதிமுக-பாஜக எதிர்க்கூட்டணிக்கும் நடுவே தேமுதிக 'டிசைடிங் ஃபேக்டர்' ஆக உள்ளது.
திமுக கூட்டணியில் இடவசதி மற்றும் சீட் பகிர்வு சிக்கல் தேமுதிகவுக்கு தடையாக உள்ளது. இந்த சூழலில், அரசியல் இடமும் நடைமுறை வசதிகளும் கிடைக்கும் என்பதால், பாஜக தலைமையிலான கூட்டணியே தேமுதிகவுக்கு சாதகமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
துண்டு சீட்டில் திமுக?
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களின் கருத்து தெரிவிப்பு படிவங்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் பெறப்பட்டது.. மாவட்ட செயலாளர்களிடம் துண்டு சீட்டு கொடுத்து கருத்து கேட்டதில், தேமுதிக மாவட்ட செயலாளர்களில் 60% திமுக கூட்டணிக்கு போகலாம் என்றும் 40% அதிமுக கூட்டணிக்கு போகலாம் என்றும் கூறியிருந்தார்களாம்.
இதையடுத்து இன்று கடலூரில் மாநாடு நடக்கிறது... இந்த மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா..
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தென்னாற்காடு பகுதியில் தேமுதிக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதன் பின்னணியில், அந்த மாவட்டத்துடன் அக்கட்சிக்கு உள்ள அரசியல் சென்டிமென்டும், வாக்கு செல்வாக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கடலூர் சென்டிமெண்ட்
இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் கூறியதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியல் களத்தில் காலடி எடுத்து வைத்த பகுதியே தென்னாற்காடு மாவட்டம். சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். பிறகு திருக்கோவிலூர், பண்ருட்டி தொகுதிகளிலும் தேமுதிக வெற்றி வெற்றது.. இதனால் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கணிசமான வாக்கு வங்கியை கொண்ட பகுதியாக உருவெடுத்தது.
அதுமட்டுமல்ல, எம்பி தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றார். அதேபோல் கடலூர் மக்களவை தொகுதியிலும் தேமுதிக கூட்டணியில் போட்டியிட்ட அனுபவம் உள்ளது.
சென்டிமெண்ட் ஃபார்முலா
அதனால்தான், தென்னாற்காடு மாவட்டம் தேமுதிகவுக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையில், விஜயகாந்த் கடைப்பிடித்து வந்த தேர்தல் சென்டிமென்ட் பார்முலாவை இப்போது பிரேமலதா தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.. இதற்காகவே இந்த ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் தேமுதிக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்கிறார்கள்.
எனினும், இந்த பகுதியில் பாமகவுக்கும் முன்பு ஓரளவு செல்வாக்கு இருந்து வந்தது. ஆனால் இப்போது அக்கட்சியில் தந்தை-மகன் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலால் பாமக இரு அணிகளாகப் பிரிந்துள்ள நிலையில், அந்தப் பிளவால் சிதறும் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் நோக்கிலும் தேமுதிக செயல்பட்டு வருவதாக தெரிகிறது..
யாருடன் கூட்டணி
அதுமட்டுமல்லாமல், கேப்டன் விஜய்காந்த் மறைவுக்கு பிறகு அக்கட்சி வாக்குவங்கி சரியத் தொடங்கியது.இந்த நிலையில், கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது தேமுதிகவிற்கு அதிமுக கூட்டணி ராஜ்சபா சீட் வழங்கப்டதாதால் தேமுதிக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சூழலில், யாருடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தத்தில் இந்த தேமுதிக அரசியல் மாநாடு தற்பொழுது தமிழகத்தின் பரபரப்பான அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications