Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா?
Aadi Velli Special Gothumai Rava Pasiparuppu Payasam Recipe In Tamil: ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையும் குடும்ப நலனுக்காக பெண்கள் விரதமிருந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, பிரசாதங்களை படைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டின் மூன்றாவது ஆடி வெள்ளியில் நீங்கள் அம்மனுக்கு ஒரு ஸ்பெஷல் ரெசிபியை செய்து படைத்து வழிகட நினைக்கிறீர்களா? அப்படியானால் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் சற்று வித்தியாசமான ருசியில் இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து வேக வைப்பதற்கு...
* கோதுமை ரவை - 1 கப் (125 மிலி கப்)
* பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 5 கப்
வறுப்பதற்கு..
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 7-8
* உலர் திராட்சை - 10
* துருவிய தேங்காய் - 1/2 கப்
வெல்ல நீருக்கு..
* பொடித்த வெல்லம் - 3 கப்
* தண்ணீர் - 1 கப்
பிற பொருட்கள்...
* உப்பு - 1 சிட்டிகை
* பால் - 300 மிலி
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை
சேர்த்து நல்ல மணம் மற்றும் நிறம் மாறும் வரை வறுத்து ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் பாசிப்பருப்பையும் சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் வறுத்த கோதுமை ரவையை சேர்த்து, 1 ஸ்பூன் நெய் ஊற்றி
நன்கு கிளறி விட்டு இறக்கி குக்கரில் சேர்த்து, அதில் 5 கப் நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து ப்ரை செய்து, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே நெய்யில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக ப்ரை
செய்து இறக்கி மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், அதை ஒரு அகலமான பாத்திரத்தில்
வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வெல்ல நீரை மீண்டும் அடுப்பில் வைத்து, நன்கு கொதி
வந்ததும், வேக வைத்த கோதுமை ரவையை ஒருமுறை கிளறி சேர்த்து ஒரு கொதி
வந்ததும், அதில் 1 சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் காய்ச்சிய
பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடித்த தேங்காய், வறுத்த முந்திரி உலர் திராட்சை
சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம்
தயார்.



Click it and Unblock the Notifications