பொங்கல் பரிசு தொகை ரூ.3000.. எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்காது? இதோ முழு விவரம்..

By Prakash S

பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் மக்களுக்குப் பொங்கல் பரிசு (Pongal gift) உடன் பணமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதாவது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.3000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனுடன் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு போன்றவை வழங்கப்பட உள்ளன. மேலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு மற்றும் பணத்தை நெரிசலின்றி விநியோகிப்பதற்காகத் தமிழக அரசு டோக்கன் முறையை அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


pongal-gift-money-of-rs-3000

தமிழகம் முழுவதும் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். மேலும் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் பொதுமக்கள் தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பையும் ரூ3000 பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் ரொக்கப் பணம் கிடைக்காது

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் ரூ.3000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதர்களுக்கும் (Rice Cards) மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதன் காரணமாக சர்க்கரை ரேஷன் அட்டை (Sugar Cards) வைத்திருப்பவர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகை மற்றும் பொருட்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அரிசி அல்லாத மற்ற அட்டைதாரர்களுக்கு இந்த பலன் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் சர்க்கரை மட்டுமே வாங்கும் அட்டைதாரர்கள் மற்றும் எந்தப் பொருட்களும் வாங்காமல் அடையாளத்திற்காக மட்டும் அட்டை (Commodity Cards) வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசு மற்றும் பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து பயனாளிகளுக்கும் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தை அளிக்க நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜனவரி 8 அல்லது ஜனவரி 9-ம் தேதி முதல் இவை வினியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான தகவலின்படி, புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ள குடும்பங்களுக்கும் பரிசு தொகுப்பும், தொகையும் வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.


விரல் ரேகை
மேலும் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அறிவிப்பில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு ஆதார் சரிபார்ப்பு வாயிலாக பாயணிட் ஆப் சேல் என்ற விற்பனை முனைய கருவியில் விரல் ரேகையை வைத்து உண்மைத் தன்மையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதாவது கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 36 லட்சம் பேர் இன்னும் விரல் ரேகையைப் பதிவு செய்யாமல் உள்ளனர். இதையடுத்து இந்த பணியை வேகமாக முடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. மேலும் இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியது என்னவென்றால், விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Credit: Gizbot

Story first published: Monday, January 5, 2026, 0:23 [IST]
Desktop Bottom Promotion