Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா?
விஜய்க்கு அடிமேல் அடி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. பிரசார வாகனத்த எடுத்து சென்று சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
சென்னை: விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து விஜய்யின் பிரசார வாகனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், இதனால் பிரசார வாகனத்தை விஜய், இனி நீதிமன்றம் சென்றுதான் மீட்க முடியும் எனவும் தகவல் வெளியானது. இதற்கு தவெகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வரும் 12 ஆம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தநிலையில் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் பட சென்சார் விவகாரம், விஜய்க்கு சிபிஐ சம்மன், தற்போது வாகனத்தை எடுத்து சென்றது என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கரூர் கூட்டநெரிசல் வழக்கு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் 2 நாட்கள் ஆய்வு செய்தனர். மேலும் கடந்த மாதம் 19-ந் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரி தலைமையிலான குழுவினரும், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் அதிகாரிகளும் அங்கு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
விஜய்யின் பிரசார வாகனம்
நேற்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தனர். விஜய்க்கு நாளை மறுநாள் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், இன்று விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் இருந்து கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு பேருந்து கொண்டு வரப்பட்ட நிலையில், அந்த பேருந்தில் ஆய்வு நடைபெறுகிறது. பிரசார வாகன டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் பரவியது. சிபிஐ பறிமுதல் செய்துள்ளதால் விஜய், இனி நீதிமன்றம் சென்றுதான் மீட்க முடியும் என கூறப்பட்டது.
அடுத்தடுத்து விழும் அடி
இந்த நிலையில் தவெகவினர் இதனை மறுத்துள்ளனர். கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள விஜய்யின் பிரசார வாகனத்தில் அதிகாரிகள் ஆய்வு தான் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் வரும் 12 ஆம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் அவரது பிரசார வாகனத்தில் ஆய்வு செய்து வருவதும், அவரது டிரைவரிடம் விசாரணை நடத்துவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











