Latest Updates
-
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
பாஜகவுக்கு 46 சீட்? ஆலோசனை கூட்டத்தில் பிஎல் சந்தோஷ் சொன்ன மேட்டரால் BJP நிர்வாகிகள் படு உற்சாகம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக இந்த முறை 20% என்ற அளவில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். கூட்டணியில் நாம் எதிர்ப்பார்ப்பதை விட அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என பாஜக தேசிய அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் கூறியிருப்பது பாஜகவினருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.
சென்னையில் இன்று பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முக்கியத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக முக்கிய ஆலோசனை
தமிழக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜகவால் நியமிக்கப்பட்ட 72 சட்டசபை தொகுதிகளுக்கான சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியிலிருநது விலகுவதாக அறிவித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பிஎல் சந்தோஷ் பேசியது என்ன?
இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 65 நாள்கள் தான் இருக்கிறது. முதல் கட்டமாகவே தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது எனப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
20% தொகுதிகளில் பாஜக
மேலும், இந்த முறை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. தேர்தல் போட்டி கடுமையாக இருக்கும். வரும் தேர்தலில் 20% என்ற அளவில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். கூட்டணியில் நாம் எதிர்ப்பார்ப்பதை விட அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என பி.எல்.சந்தோஷ் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மூத்த நிர்வாகிகள் தங்களை மட்டும் முதன்மைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பாஜகவில் நியமித்த தேர்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கான தொகுதிகளில் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால் நிர்வாகிகள் அனைவரும் முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுதி உள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் அணிகள், பரப்புரை வியூகங்கள், பிரச்சாரங்களில் மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைப்பது, திமுக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த தலைவர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிகிறது.
சென்னையில் பிஎல் சந்தோஷ்.. அண்ணாமலையை சமாதானம் செய்ய டெல்லி முயற்சி? பரபரக்கும் பாஜக!
46 சீட்? பாஜக நிர்வாகிகள் செம உற்சாகம்
குறிப்பாக இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், 20% என்ற அளவில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். கூட்டணியில் நாம் எதிர்ப்பார்ப்பதை விட அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என பி.எல்.சந்தோஷ் பேசி இருப்பது பாஜகவினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த முறை 20% தொகுதிகள் என்றால் சுமார் 46 தொகுதிகளில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











