Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்காரங்க அனைவருக்கும் நல்லது பண்றதையே இலட்சியமாக வைச்சிருப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கருணையும் பெருந்தன்மையும் அனைவரிடமும் இருக்க வேண்டிய குணமாகும். ஏனெனில் இந்த குணங்கள் இருப்பவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாகவும், அனைவருக்கும் நன்மை செய்பவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் இந்த குணங்கள் சிலரிடம் மட்டுமே உள்ளது.
இந்த குணங்கள் அத்தகைய நபர்களை மற்றவர்களுடன் ஆழமான மட்டத்தில் இணைக்க அனுமதிக்கிறது. இருப்பினும், இது அவர்களை மற்றவர்களால் பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கிறது. எனவே மற்றவர்களிடம் நம்பமுடியாத அளவிற்கு நல்லவர்களாக நடந்து கொள்ளும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் அவர்களின் இரக்க மற்றும் பச்சாதாப இயல்புக்காக அறியப்படுகிறது, அவர்கள் உணர்ச்சிரீதியாக மக்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த நலன்களை விட மற்றவர்களின் நல்வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், இது சிலசமயங்களில் பெரும்பாலும் அவர்களுக்கு எதிராக திரும்பலாம்.
அவர்களின் தன்னலமற்ற இயல்பு மற்றும் மற்றவர்களின் நன்மைக்காக உதவும் இயல்வு ஆகியவை இந்த ராசியில் பிறந்தவர்களை பலரின் பார்வையில் உண்மையிலேயே நம்ப முடியாத அளவிற்கு நல்லவர்களாக ஆக்குகின்றன.
கடகம்
இந்த ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே அக்கறையுடனும்,அரவணைப்புடனும் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு அரவணைப்பு உணர்வை உருவாக்கி, அவர்களை மதிப்புமிக்கவர்களாகவும் பாராட்டப்பட்டவர்களாகவும் உணர வைக்கிறார்கள்.
அவர்களின் உள்ளுணர்வு இயல்பு அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளை புரிந்து கொள்ள வைக்கிறது, இது மற்றவர்கள் உதவி கேட்கும் முன்னரே அவர்களுக்கு உதவ வைக்கிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அவர்களின் இராஜதந்திரம் மற்றும் நேர்மைக்காக அனைவராலும் பாராட்டப்படுபவர்களாக இருப்பார்கள். உறவுகள் என்று வரும்போது, அவர்கள் மற்றவர்களுடன் நல்லிணக்கத்தையும் ஒத்துழைப்பையும் உருவாக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வலுவான நீதி மற்றும் சமநிலை உணர்வைக் கொண்டுள்ளனர்.
மற்றவர்களுக்கு தங்கள் நேரத்தையும், வளங்களையும் வழங்கும்போது, அவர்கள் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் எப்போதும் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பார்கள். அவர்களின் இரக்க குணம் அவர்களை தேவைப்படுபவர்களுக்கு தேடிச்சென்று உதவ வைக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் அவர்களின் எதார்த்த இயல்புக்காக அறியப்படுகிறார்கள், இருப்பினும் அவர்கள் மற்றவர்களிடம் ஆழ்ந்த இரக்க உணர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும் மிகவும் கவனத்துடன் இருக்கிறார்கள், இது அவர்களை உதவி தேவைப்படும் நபர்களை விரைவாக கவனிக்க வைக்கிறது.
அவர்களின் இயற்கையான குணத்தின் படி, கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு நடைமுறை ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் எப்போதும் பெருமிதம் கொள்கிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு விசுவாசம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்காக அறியப்படுகிறார்கள். அவர்களின் உறவுகளைப் பொறுத்தவரை, அவர்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் பெரும்பாலும் தாங்கள் அக்கறை கொண்டவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆறுதலுக்கு முன்னுரிமை அளிப்பார்கள், இது அவர்களை அன்பான இதயமுள்ளவர்களாக ஆக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












