Latest Updates
-
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க பணமழையில் நனையப் போறாங்களாம் -
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்..
பூமியில் கடல் எப்படி உருவானது தெரியுமா? பூமியில் உருவான முதல் கடலின் பெயர் என்ன அது எங்கு இருந்தது தெரியுமா?
நமது கிரகமான பூமி விண்வெளியில் இருந்து பார்க்கும் போது நீல நிறத்தில் காட்சியளிக்கும், இதற்கு காரணம் பூமியின் மேற்பரப்பில் ஏராளமான நீர் இருப்பதுதான். பூமியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கடல்களால் சூழப்பட்டுள்ளது. பூமியானது ஆர்க்டிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் தெற்குப் பெருங்கடல் என ஐந்து பெருங்கடல்களைக் கொண்டுள்ளது. ஆனால் கடல் எப்படி உருவானது தெரியுமா?
கடல் அழகை பார்க்கும் போதெல்லாம் அது எப்படி நம் பூமிக்கு வந்திருக்கும் என்ற கேள்வி நமக்குள் எழும். அந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்குத் தேவையான பதிலை அளிக்கும்.

பூமியின் உட்பகுதியின் தொடர்ச்சியான 'டிகாஸ்ஸிங்' காரணமாக பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கடல்கள் உருவாகத் தொடங்கின. பூமி 212 டிகிரி பாரன்ஹீட்டிற்கு கீழே குளிர்ச்சியடையும் வரை நீர் வாயு வடிவில்தான் இருந்தது. பூமியின் மேற்பரப்பில் பெருங்கடல்கள் உருவானதற்கு விஞ்ஞானிகள் கூறும் காரணங்கள் சிலவற்றை மேற்கொண்டு பார்க்கலாம்.
நீராவி மற்றும் ஒடுக்கம்
சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் எங்கும் திரவ நீர் காணப்படவில்லை. பூமி மிகவும் சூடாக இருந்தது, பாறைகள் உருகியிருந்தன அவை திரவ வடிவில் இருந்தன. எரிமலை வெடிப்புகள் ஏற்பட்ட போது, வாயு ஒன்று நீராவியாக வெளியேறியது. பூமி குளிர்ந்தவுடன், இந்த நீராவி ஒடுங்கி, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பூமியின் மேற்பரப்பில் மீண்டும் மழை பெய்தது. விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பில் நீர் இப்படித்தான் வந்தது என்று கூறுகிறார்கள்.
வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள்
வால்மீன்கள் என்பது நட்சத்திரங்கள் மற்றும் பிற கிரகங்கள் உருவான பிறகு எஞ்சியிருக்கும் பனி மற்றும் தூசியின் பெரிய துண்டுகளாகும். விண்கற்கள் பொதுவாக பெரிய பாறைகள் அல்லது சிறிய கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் உருவானபோது இவை பின்தங்கிவிட்டன.
ஒரு சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, அது விண்கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, பூமியின் வளிமண்டலத்தை கடந்து செல்லும் போது விண்கற்கள் எரிகின்றன, ஆனால் சில நேரங்களில் சில துண்டுகள் அழியாமல் இருக்கும். இந்த துண்டுகள் விண்கற்கள் என்று அழைக்கப்படுகின்றன. சில விஞ்ஞானிகள் கடல்களில் மீதமுள்ள நீர் வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றிலிருந்து வந்தது என்று நினைக்கிறார்கள்.
கார்பனேசியஸ் காண்ட்ரைட் என்பது ஒரு வகையான விண்கல், இதில் நிறைய தண்ணீர் உள்ளது. சமீபத்தில், விஞ்ஞானிகள் கார்பனேசியஸ் காண்டிரைட்டுகளில் உள்ள நீர் பூமியில் காணப்படும் தண்ணீருடன் பொருந்துகிறது என்று கண்டறிந்துள்ளனர்!
பூமியின் மேற்பரப்பில் உள்ள பெரிய பள்ளங்களுக்குள் நீர் வடிந்ததால், பெருங்கடல்கள் உருவாகின மற்றும் பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக, நீர் கிரகத்தை விட்டு வெளியேற முடியவில்லை.
உடலுக்கு இரத்தம் போல பூமிக்கு கடல்
கடல்தான் பூமியை வாழக்கூடியதாக மாற்ற உதவுகிறது. ஏனென்றால், கிரகத்தைச் சுற்றி வெப்பத்தையும் நீரையும் திறம்படச் சுழற்றுவதற்கு வளிமண்டலத்துடன் இணைந்துள்ளது. கடல் நீரோட்டங்கள் இல்லையென்றால் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் வெப்பமாக இருக்கும், மேலும் அதிக அட்சரேகைகளில் உள்ளவை மிகவும் குளிராக இருக்கும்.
வளைகுடா நீரோடை(Gulf Stream) மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து சூடான நீரை வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் அட்லாண்டிக் வழியாக பிரிட்டிஷ் தீவுகளை நோக்கி கொண்டு வரும் வலுவான நீரோட்டம், இதற்கு சரியான எடுத்துக்காட்டாகும். வெதுவெதுப்பான நீரின் நிலையான வருகை ஐரோப்பாவின் காலநிலையை உறுதிப்படுத்த உதவுகிறது, இல்லையெனில் அதன் அட்சரேகையின் அடிப்படையில் மிகவும் குளிராகவும் கடுமையாகவும் இருக்கும்.
பூமியின் முதல் கடல்
பந்தலஸ்ஸா, பந்தலாசிக் பெருங்கடல் அல்லது பந்தலஸ்ஸன் பெருங்கடல் என்று அழைக்கப்ட்ட இதுதான் பூமியின் முதல் கடல் ஆகும். கிரேக்க வார்த்தையா இதன் அர்த்தம் 'அனைத்து கடல்' என்பதாகும். இது பாங்கேயாவைச் சூழ்ந்திருந்த பெருங்கடல் ஆகும். பேலியோசோயிக்-மெசோசோயிக் மாற்றத்தின் போது உருவான இது 250 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 70% இந்த கடல் ஆக்கிரமித்து இருந்தது.



Click it and Unblock the Notifications
