Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பெண்களே! இந்த 7 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மச்சம் இருக்கா? அப்ப உங்களுக்கு கோடீஸ்வர கணவர் கிடைப்பாராம்...!
பணக்கார கணவர் கிடைக்க வேண்டுமென்பது பெரும்பாலான பெண்களின் கனவாக இருக்கும், ஆனால் அனைவருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துவிடாது. உங்களுக்கு பணக்கார கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டம் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
பெண்களின் மச்சங்களில் இதற்கான ரகசியம் ஒளிந்துள்ளது. பெண்களின் உடலில் சில இடங்களில் மச்சம் இருப்பது அவர்கள் பொருளாதாரரீதியாக ஸ்திரத்தன்மை வாய்ந்த பணக்கார கணவரை அடைவதை உறுதி செய்கிறது. இந்த பதிவில் உடலில் எந்தெந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் பணக்கார கணவரை அடைவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

இடது அல்லது வலது கண் இமையில் மச்சம்
ஒரு பெண்ணுக்கு இடது மற்றும் வலது கண் இமைகளில் ஏதேனும் ஒன்றில் மச்சம் இருந்தால், அவர்கள் விரைவில் பணக்காரர்களாக மாறுவார்கள். அது திருமணத்தின் அடிப்படையில் இருக்கலாம். இந்த பெண்கள் நம்பகமான மனைவிகள், சகோதரிகள் மற்றும் நண்பர்களாக இருக்கலாம். இந்த இடத்தில் மச்சம் உள்ள பெண்கள் வாழ்க்கையின் அனைத்து ஆடம்பரங்களையும் அனுபவிப்பார்கள் மற்றும் பணக்கார வாழ்க்கைத் துணையைப் பெறுவார்கள்.
கன்னத்தில் மச்சம்
கன்னங்களில் மச்சம் உள்ள பெண்கள் வாழ்க்கைத் துணையைப் பெறுவதில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த பெண்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகிறார்கள். அவர்கள் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் புத்திசாலித்தனத்துடன் அழகையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கழுத்தில் மச்சம்
கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள் அமைதி மற்றும் பொறுமையான அணுகுமுறை கொண்டவர்களாக இருப்பார்கள். பொதுவாக, இந்த பெண்கள் புத்திசாலிகள் மற்றும் வேடிக்கையானவர்கள். அவர்களின் கடின உழைப்பு அவர்களின் கனவுகளை நனவாக்க உதவுகிறது. இந்த பெண்களுக்கு ககண்ணியமான வாழ்க்கைத்துணை கிடைப்பார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அவர்களின் பங்குதாரர் சிறப்பாக செயல்படுவார். அவர்களின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவராக இருப்பார்கள்.
வலது தோள்பட்டையில் மச்சம்
வலது தோள்பட்டையில் மச்சம் உள்ள பெண் உடலில் பணக்கார கணவரின் மச்சமாகவும் கருதப்படுகிறது. வலது தோளில் உள்ள மச்சம் வலிமை மற்றும் ஆதரவைக் குறிக்கிறது. வலது தோளில் மச்சம் உள்ள பெண்கள் பொதுவாக பணக்கார, நம்பகமான மற்றும் அன்பான கணவரை ஈர்க்கிறார்கள்.
இடது மார்பில் மச்சம்
பெண் உடலின் இடது மார்பில் உள்ள மச்சம் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் ஆடம்பரத்தைக் குறிக்கிறது. வேத ஜோதிடத்தின்படி, இது செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இத்தகைய மச்சம் உள்ள பெண்கள் செல்வந்தரை மணந்து ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துவார்கள்.
வலது உள்ளங்கையில் மச்சம்
வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால், அது பெரிய நிதி வெற்றியைக் குறிக்கிறது. இந்த பெண்கள் பணக்கார கணவரை ஈர்க்கிறார்கள் என்று கூறப்பட்டாலும், அவர்கள் சுயமாகவும் ஆடம்பர வாழ்க்கையை பெறுகிறார்கள். எனவே வலது உள்ளங்கையில் உள்ள மச்சம் பெண் ஆடம்பரமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.
மேல் உதட்டில் மச்சம்
மேல் உதடுகளில் மச்சம் உள்ள பெண்கள் அழகையும், செல்வத்தையும் குறிக்கின்றனர். அவர்கள் பணக்கார மற்றும் அன்பான வாழ்க்கைத்துணையை அடையும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












