Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த நாட்களில் கருப்பு நிற ஆடை அணிவது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தையும், கடவுளின் சாபத்தையும் கொடுக்குமாம்!
இந்திய வீடுகளில் எந்த ஒரு நல்ல சந்தர்ப்பத்திலும் மக்கள் கருப்பு நிறங்களை அணிவதைத் தவிர்க்கிறார்கள். தீபாவளி, நவராத்திரி, ரக்ஷா பந்தன் மற்றும் பல விஷேஷமான நாட்களில், மக்கள் பிரகாசமான மற்றும் அழகான வண்ணங்களை அணிய விரும்புகிறார்கள்.
இந்துக்கள் கோயில்களுக்குச் செல்லும் போது அல்லது சில பெரிய திருவிழாக் கொண்டாட்டங்களின் போது கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். பிரபலமான நம்பிக்கைகளின்படி கருப்பு என்பது பொதுவாக துக்கத்துடன் தொடர்புடையது.

கருப்பு என்பது கவர்ச்சிகரமான நிறமாகவும், அனைத்து நிறங்களுடனும் ஒத்துப்போவதால் பெரும்பாலான மக்கள் கருப்பு நிறத்தை அணிய விரும்புகின்றனர், ஆனால் குறிப்பிட்ட நாட்களில் கருப்பு நிறத்தை அணிவது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பொதுவாக திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கருப்பு அணிவதைத் தவிர்க்க முயற்சிப்பது நல்லது.
திங்கட்கிழமை கருப்பு உடை அணிவதை ஏன் தவிர்க்க வேண்டும்?
திங்கட்கிழமைகள் பொதுவாக சிவபெருமானை போற்றுவதற்கும் வணங்குவதற்கும் சிறந்த நாளாகும். இந்து மதத்தில், சிவபெருமான் மரணத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார் , இதனால் 'மகா தேவ்' என்று குறிப்பிடப்படுகிறார், அதாவது மிகப் பெரிய கடவுள் என்று அர்த்தம்.
அவர் அனைத்து கடவுள்களை விடவும் மிக உயர்ந்த சக்தியைக் கொண்டுள்ளார், மேலும் அவர் இந்து புராணங்களின்படி, அழித்தலின் கடவுளாக கருதப்படுகிறார். கறுப்பு நிறம் இருள் மற்றும் மரணத்துடன் வலுவாக தொடர்புடையது என்பதால், மக்கள் இந்த நிறத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக திங்கட்கிழமைகளில் சிவபெருமானை மகிழ்விக்க பால் மற்றும் தேன் கொண்டு வழிபடவும்.
செவ்வாய் கிழமையில் கருப்பு நிற ஆடைகளை ஏன் தவிர்க்க வேண்டும்?
மக்கள் செவ்வாய் கிழமை கருப்பு நிறத்தை அணிவதை தவிர்க்கின்றனர். செவ்வாயும் சனியும் எதிரி கிரகங்கள் என்று நம்பப்படுகிறது, மேலும் கருப்பு என்பது சனியின் நிறம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, செவ்வாய்க் கிழமை கருப்பு அணிவது அசுபமாக கருதப்படுகிறது.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமை அனுமன் பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான நாட்கள். இந்த நாட்களில் அனுமனை வழிபடுவதன் மூலம் வாழ்வின் அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம். அனுமன் கறுப்பு நிறத்தில் இருந்து தன்னை வலுவாக விலக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது. நீங்கள் அனுமனின் ஆசிகளைப் பெற விரும்பினால், கோயிலுக்கு செல்லும்போது சிவப்பு நிற ஆடைகளை அணிய முயற்சிக்கவும்.
கருப்பு நிறத்தின் முக்கியத்துவம்
கருப்பு என்பது இந்து மதத்தில் தீய மற்றும் கெட்ட ஆற்றலைக் குறிக்கிறது. இது மரணம், எதிர்மறை ஆற்றல் மற்றும் இருளைக் குறிக்கிறது. இருப்பினும், கண்திருஷ்டியைத் தடுக்க கருப்பு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் நெற்றியில் கருப்பு மையில் சிறிய கரும்புள்ளியைப் பூசுவதை இந்தியர்கள் நீண்டகாலமாகப் பின்பற்றி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
