Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம்
ஒருவரின் கைரேகை ஏன் எப்போதும் இன்னொருவரின் கைரேகை மாதிரி இருப்பதில்லை...அதுக்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்!
அலுவலப் பணியில் இருப்பவர்கள் முதல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் வரை அனைவரும் தினமும் தங்களின் கைரேகையை பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுக்க பல தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களால் ஒருவரின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்தப்படும் மிகவும் நம்பகமான முறைகளில் ஒன்றாக கைரேகைகள்.
ஸ்மார்ட்போன்களைத் திறப்பது முதல் உயர்-பாதுகாப்பு வசதிகளைப் பாதுகாப்பது வரை, ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை பரிசோதிக்கும் அமைப்புகளின் ஒருங்கிணைந்த பகுதியாக கைரேகைகள் மாறிவிட்டன. அவற்றின் பயன்பாடு சட்ட அமலாக்கம், தடயவியல் விசாரணைகள் மற்றும் அன்றாட வாழ்வில் பயோமெட்ரிக் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவியுள்ளது.

ஒருவரின் மரபணு கூட மற்றொருவருடன் ஒத்துப்போகும் போது ஒருவரின் கைரேகை மட்டும் எப்படி தனித்வமானதாக இருக்கிறது என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
'செல்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு கைரேகை பற்றிய மர்மத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. நமது தனித்துவமான கைரேகைகளின் உருவாக்கம் வரிக்குதிரைகள் மற்றும் சிறுத்தைகளில் புள்ளிகளை உருவாக்கும் அதே உயிரியல் வடிவ செயல்முறையைப் பின்பற்றுகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
கைரேகைகள் தானாக உருவானதாக நம்பப்படுகிறது, ஏனெனில் அவை பொருள்களின் அமைப்பைப் பிடிக்கும் அல்லது உணரும் திறனை மேம்படுத்துகின்றன, ஆனால் அவை உருவான உண்மையான வழிமுறை ஒரு புதிராகவே இப்போதும் இருக்கிறது.

கைரேகை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவைக் கண்டறிய நிறுவ, ஆராய்ச்சியாளர்கள் குழு கருவில் உள்ள எலிகளில் இந்த வடிவங்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள மரபியல் பற்றி ஆய்வு செய்தது. Turing reaction-diffusion system எனப்படும் ஒரு நிகழ்வை இந்த ஆராய்ச்சி குழு கண்டறிந்தது, இதுதான் ஒருவரின் தனித்துவமான கைரேகைகளுக்கு காரணமாக இருக்கிறது.
இந்த வளர்ச்சி செயல்முறையானது 1950 ஆம் ஆண்டில் ஆலன் டூரிங் என்பவரால் முதன்முதலில் முன்மொழியப்பட்டது, இலைகள் ஏன் தனித்துவமான வடிவத்தில் வளர்கின்றன என்பதை இந்த கோட்பாடு விளக்கியது. வளரும் அமைப்பில் இரண்டு முரண்பாடான ஆற்றல்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது என்று அவர் விளக்கினார், இதில் ஒன்று செல் வளர்ச்சியை ஆதரிக்கிறது மற்றும் மற்றொன்று வளர்ச்சியைத் தடுக்கிறது. இது முகடுகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தது, இதுதான் வரிக்குதிரை மீது கோடுகள் அல்லது விரல் நுனியில் சுழல்கள் போன்ற தனித்துவமான அமைப்புகளுக்கு வழிவகுத்தது.
இந்த ஆய்வின் விஞ்ஞானிகள் கருவில் உள்ள எலிகளிடம் இந்த நிகழ்வை கவனித்தனர். விரல் நுனியின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் முனை, மையம் மற்றும் மேல் மூட்டுக்கு அருகில் முகடுகள் உருவாகியிருப்பதை அவர்கள் கண்டனர். செல்களின் வெவ்வேறு குழுக்கள் அவற்றின் நிலையின் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும்போது, சிக்கலான சுழல் வடிவங்கள் வெளிவரத் தொடங்கின.
எனவே கைரேகைகள் கருப்பையில் விரல்களை சீரற்ற முறையில் வைப்பதன் மூலம் உருவாகின்றன, செல்கள் ஒன்றுக்கொன்று எதிராக முகடுகளை உருவாக்குகின்றன. அதனால்தான், ஒரே மாதிரியான இரட்டையர்கள் கூட வெவ்வேறு கைரேகைகளைக் கொண்டுள்ளனர். கைரேகை பற்றிய இந்த ஆய்வு இதுவரை இருந்த பல கேள்விகளுக்கு பதிலைக் கொடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications
