Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
200 ஆண்டுகளாக இந்தியாவின் இந்த பகுதியில் மட்டும் தீபாவளி கொண்டாடுவதில்லையாம் - ஏன் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகை பெரும்பாலும் ஐப்பசி மாதத்தில் வரும். ஆனால் சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்திலேயே வந்துவிடும்.
வாழ்வில் உள்ள இருளை அகற்றி வெளிச்சத்தைத் தரும் பண்டிகையாக இது திகழ்கிறது. இந்த தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இப்படிப்பட்ட தீபாவளி பண்டிகை இந்தியாவின் ஒரு கிராமத்தில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை என்பது தெரியுமா?

அதுவும் சுமார் 200 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதில்லையாம். மாறாக இந்நாளை ஒரு துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனராம். சரி, ஏன் இந்த கிராமத்தில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை, அதற்கு பின்னணியில் இருக்கும் உண்மை காரணம் என்ன என்பது குறித்து இப்போது காண்போம்.
தீபாவளியில் இருளில் மூழ்கியிருக்கும் மேலுக்கோட்டை
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து 100 கிமீ தொலையில் அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் மேலுக்கோட்டை.
இந்த மேலுக்கோட்டை மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த இடமானது 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ வைஷ்ணவ துறவியான ராமானுஜாச்சாரியாரின் இல்லமாக இருந்தது. மேலும் இங்கு பல முக்கியமான வழிபாட்டு சன்னதிகளுடன், செலுவநாராயண ஸ்வாமி கோயிலும் அமைந்துள்ளது, மேலும் இந்த இடம் ஒரு பழங்கால கல்வி மையம் என்ற புகழைப் பெற்றுள்ளது.
இருளில் மூழ்கியிருக்கும் மேலுக்கோட்டை
மேலுக்கோட்டையில் 200 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. இதற்கு காரணம் வலிமைமிக்க இஸ்லாமிய போர்வீரன் என்று அழைக்கப்படும் திப்பு சுல்தான் தான். மேலுக்கோட்டையில் ஐயங்கார் பிராமணர்கள் என்று அழைக்கப்படும் ஒரு சமூகம் உள்ளது. இந்த சமூகத்தினர் தான் இன்று வரை தீபாவளியை கொண்டாடுவதில்லை. இந்த சமூகத்தினருக்கு தீபாவளி என்பது ஒரு துக்க நாளாகும். அப்படி என்ன திப்பு சுல்தான் செய்தார் என்ற கதையை அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஐயங்கார் பிராமணர்களும்.. மைசூர் ராஜ்ஜியமும்..
இந்த கதையானது மைசூர் ராஜ்ஜியம் மற்றும் திப்பு சுல்தான் மற்றும் அவரது கொடுங்கோல் ஆட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மைசூர் சாம்ராஜ்ஜியத்தில், 1600 ஆம் ஆண்டுகளில் இந்த பகுதியானது உடையார்களால் ஆளப்பட்டது. உடையார்களின் கீழ், மாண்டியம் ஐயங்கார்கள் கர்நாடகாவில் குடியேறினர். அதன் பின் செலுவநாராயணன் கோவிலின் அதிகாரம் உட்பட முக்கிய நிர்வாக மற்றும் பிற பதவிகளை வகித்தனர்.
இருப்பினும், காலப்போக்கில் உடையார்கள் தங்கள் அதிகாரத்தின் பெரும்பகுதியை தளபதிகளுக்கு விட்டுவிட்டார்கள். 1763-ல் இரண்டாம் கிருஷ்ணராஜா உடையாரின் மறைவுக்கு பின், ராஜ்ஜியத்தின் மிகவும் செல்வாக்குமிக்க தளபதி மைசூர் ராஜ்ஜியத்தின் அசைக்கமுடியாத ஆட்சியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஹைதர் அலிக்கு பின் அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்தார்.
மாண்டியம் ஐயங்கார் பிராமணர்களின் ஆட்சியின் போது தான், மாண்டியம் ஐயங்கார் பிராமணர்களின் செல்வாக்கு மற்றும் செழிப்பு ஆகியவை பெரும் எண்ணிக்கையிலான உடையார்களுக்குக் கிடைத்தன. உடையார்களுக்கு விசுவாசமாக, ஐயங்கார் பிராமணர்கள் ஹைதர் அலியை அரியணையில் இருந்து அகற்றி, ஒரு உடையாரைத் திரும்ப வைக்க முயற்சித்தனர்.
இதற்காக மாண்டியம் ஐயங்கார்கள் டோவேஜர் ராணி லக்ஷ்மம்மணி மற்றும் இரண்டு இரண்டு ஐயங்கார் சகோதரர்களை முன்நிறுத்தி ஆதரித்தனர். ஆனால் இந்த சதி ஹைதர் அலியால் கண்டுபிடிக்கப்பட்டது. ஐயங்கார் சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஹைதர் அலியின் மரணத்திற்குப் பிறகு, உடையாரை மீண்டும் அரியணையில் அமர்த்துவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தன. இதனால் கோபம் கொண்ட ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் ஒட்டுமொத்த சமூகத்தையும் படுகொலை செய்தார்.
ஐயங்கார் பிராமணர்கள் ஏன் தீபாவளி கொண்டாடுவதில்லை?
திப்பு சுல்தான் ஆட்சியில், மாண்டியம் ஐயங்கார்கள் தீபாவளியை கொண்டாவடுவதற்காக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் காவிரிக் கரையில் உள்ள நரசிம்மசுவாமி கோவிலில் கூடினர். கொடுங்கோலன் திப்பு சுல்தான் பழிவாங்குவதற்காக சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில், தீபாவளி பண்டிகையில் இவர்கள் கூடுவதை கண்டறிந்தான். இந்துக்கள் மீதான வெறுப்பின் காரணமாக, அந்த ஐயங்கார் பிராமணர்கள் அனைவரையும் படுகொலை செய்ய உத்தரவிட்டான்.
அப்போது சுமார் 700-800 ஐயங்கார் பிராமணர்கள் திப்புவின் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் மற்றும் மேலுக்கோட்டை முற்றிலும் அழிந்தது. அங்கிருந்த மீதமுள்ள மக்கள் அந்த நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஒரே நாள் இரவில் மேலுக்கோட்டை ஒரு இருள் சூழ்ந்த பேய் நகரமாக மாறியது. இந்த காரணத்தினால் தான், மாண்டியம் ஐயங்கார் சமூகத்தினர் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை மற்றும் அந்நாளை துக்க நாளாக அனுசரிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications











