Latest Updates
-
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு கடலால் உருவாகியுள்ள புதிய ஆபத்து என்ன தெரியுமா? -
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க... -
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்
ஆங்கிலேயர்கள் ஏன் தாஜ்மஹாலை விற்க முயன்றனர்? எவ்வளவு தொகைக்கு விற்க முயன்றார்கள் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
உலகக் காதலர்களின் சின்னம் மற்றும் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பற்றி இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் அனைவருமே நன்கு அறிவார்கள். கட்டிடக்கலை அதிசயமான இந்த கட்டிடத்தை முகலாய அரசர் ஷாஜஹான் இறந்த தனது மனைவியான மும்தாஜ் நினைவாக இதனைக் கட்டினார்.
இது வருடந்தோறும் உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது, இதற்கு காரணம் அதன் கட்டிடக்கலை மட்டுமல்ல, அதற்கு பின்னால் இருக்கும் உருக்கமான கதையும்தான். இணையில்லா காதலின் சின்னமாக அறியப்படும் இந்த நினைவுச்சின்னம் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் மகத்துவத்தின் பெருமைக்குரிய அடையாளமாக மாறியுள்ளது.

தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் முதல் இப்போது வரை சர்ச்சைகள் அதை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதேபோல தாஜ்மஹாலை சுற்றி பல ரகசியங்களும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தாஜ்மஹாலைப் பற்றி கூறப்படும் ஒரு ரகசியங்களில் முக்கியமான ஒன்று ஆங்கிலேயர்கள் இந்த அதிசயத்தை விற்க முயன்றதுதான்.
ஆங்கிலேயர்கள் இந்த அற்புதமான நினைவுச்சின்னத்தை விற்க முயன்ற காலம் இருந்தது. 1831 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அதிகாரிகள் தாஜ்மஹாலின் சில பகுதிகளை ஏலம் விட முயன்றனர், இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரிட்டிஷ் கவர்னர் லார்ட் வில்லியம் பென்டிங்க் காலத்தில் தான் இந்த முயற்சி நடந்தது. அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாக, தாஜ்மஹாலின் ஒரு பகுதி உண்மையில் அகற்றப்பட்டு அதன் பளிங்குக்கற்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
இடிக்கப்பட்ட பகுதியிலிருந்த பளிங்கு கற்கள் ஏலம் விடப்பட்டதாகவும், ஆக்ராவைச் சேர்ந்த சேத் லக்ஷ்மி சந்த் என்ற இந்திய தொழிலதிபர் அதற்கு அதிக விலை கொடுத்து வாங்கியதாகவும் சில அறிக்கைகள் கூறுகின்றன. அவர் தாஜ்மஹாலை வாங்க ஏழு லட்சம் ரூபாய் வழங்கினார், அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரியத் தொகையாக கருதப்பட்டது. இருப்பினும், வில்லியம் பென்டிங்க் பிரபு இந்த தொகையை மிகக் குறைவாகக் கருதினார், இதனால் ஏலத்தை ரத்து செய்து தாஜ்மஹால் விற்கப்படுவதைத் தடுத்தார்.
முதல் ஏலம்
தாஜ்மஹாலின் பளிங்கு கற்களை சேத் லக்ஷ்மிசந்த் அதிகபட்சமாக ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார், ஆனால் அந்த தொகை மிகக் குறைவாக இருந்ததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இரண்டாவது ஏலம்
சேத் லக்ஷ்மிசந்த் ரூ. 7 லட்சத்தை ஏலத்தொகையாக செலுத்தி ஏலத்தை மீண்டும் வென்றார், ஆனால் பிரிட்டிஷ் சமூகத்தின் சீற்றம் மற்றும் வகுப்புவாத கலவரத்தின் பயம் காரணமாக அந்த ஏலம் ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த சம்பவம் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றாலும், இந்தியாவின் தலைசிறந்த கட்டுமானங்களில் ஒன்றை வணிகமயமாக்கும் பிரிட்டிஷ் அரசின் பேராசையை எடுத்துக்காட்டுகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த உலக அதிசயம் இறுதியில் விற்கப்படாமல் பாதுகாப்பாக இருந்தது மற்றும் இன்றும் உலகக் காதலர்களின் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது.



Click it and Unblock the Notifications
