Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
இந்தியாவிற்கு முதல் ATM எப்போது வந்தது தெரியுமா? ATM மிஷினை கண்டுபிடித்த அந்த ஜீனியஸ் யார் தெரியுமா?
இன்று உலகமே டெக்னலாஜியை நம்பிதான் உள்ளது. விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதிலிருந்து முதல் ஒருவரின் அக்கவுண்ட்க்கு பணம் போடுவது வரை அனைத்திற்க்கும் தொழில்நுட்பமே அடிப்படையாக உள்ளது. அந்த வகையில் சாமானிய மக்கள் வங்கி செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும் டெக்னலாஜி வந்துவிட்டது. வங்கித்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு என்றால் அது ATMதான்.
ஒரு காலத்தில் மக்கள் பணத்தை எடுக்கவும், செலுத்தவும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது ATM உதவியுடன் அவை அனைத்தும் சில நிமிடங்களில் செய்து விடக்கூடிய எளிய வேலையாக மாறிவிட்டது. இன்று தெருவுக்கு தெரு இதுக்கும் ATM-களை முதலில் கண்டுபிடித்தவர் யார் மற்றும் ATM இந்தியாவிற்கு எப்போது வந்தது என்று தெரியுமா?

58 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 27, 1967 அன்று, லண்டனில் உள்ள என்ஃபீல்ட் என்ற நகரத்தில் உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த இயந்திரம் பார்க்லேஸ் வங்கியின் ஒரு கிளைக்கு வெளியே அமைக்கப்பட்டு "பார்க்லேகாஷ்" என்று பெயரிடப்பட்டது. தொடக்க விழாவை அந்த நேரத்தில் பிரபலமான பிரிட்டிஷ் நடிகரான ரெக் வார்னி நடத்தினார்.
முதலில், ஏடிஎம் மக்கள் ஒரு முயற்சியில் £10 வரை மட்டுமே எடுக்க அனுமதித்தது. இருப்பினும், வங்கிகளின் விடுமுறை நாட்களிலும், வங்கிகள் மூடப்பட்ட பிறகும் கூட பணத்தை எடுக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கியதால், அது ஒரு பெரிய விஷயமாக இருந்தது, மேலும் மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தம் விதத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத் தொடங்கியது.
ஏடிஎம் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஏடிஎம் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜான் ஷெப்பர்ட்-பரோன், இவர் 1925 ஆம் ஆண்டு மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்தார். இந்த அசாதாரண கண்டுபிடிப்புக்கான யோசனை மிகவும் சாதாரணமான ஒரு பிரச்சனையிலிருந்து அவருக்கு தோன்றியது, அதாவது ஒரு காலத்தில் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது, ஆனால் வங்கி மூடப்பட்டதால் அதைப் பெற முடியவில்லை. அப்போதுதான் அவர் நினைத்தார், "வென்டிங் மெஷின்கள் சாக்லேட்டுகளை வழங்க முடியும் போது, அதேபோல பணம் வழங்கும் ஒரு மிஷினை ஏன் நம்மால் கண்டுபிடிக்க முடியாது" என்று அவர்கள் நினைத்தார்.
இந்த யோசனையால் ஈர்க்கப்பட்ட, அவர் பார்க்லேஸ் வங்கியின் அதிகாரிகளுடன் இந்த யோசனையைப் பகிர்ந்து கொண்டார். அவர்களுக்கும் இந்த யோசனை மிகவம் பிடித்திருந்தது, இரண்டு ஆண்டு முயற்சிகளுக்குப் பிறகு, முதல் ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்கள் சந்திக்கும் அன்றாட சிரமத்திற்கு ஒரு எளிய தீர்வாகத் தொடங்கிய ஒன்று, நவீன வங்கிகளின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக மாறியது, உலகெங்கிலும் உள்ள மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தங்கள் பணத்தை எடுத்துக் கொள்ள இது அனுமதித்தது.
இந்தியாவிற்கு ATM எப்போது வந்தது?
இந்தியா தனது முதல் ஏடிஎம் இயந்திரத்தை 1987 ஆம் ஆண்டு பெற்றது. இது மும்பையில் உள்ள சஹார் சாலையில் உள்ள HSBC வங்கி கிளையில் அமைக்கப்பட்டது. இந்த ஏடிஎம் இந்திய வங்கி அமைப்பில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது. வங்கி கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமின்றி மக்கள் பணத்தை எடுக்க அனுமதிப்பதன் மூலம் இது ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வந்தது.
இந்த முதல் ATM வந்த பிறகு, ஏடிஎம் பயன்பாடு நாடு முழுவதும் விரைவாகப் பரவியது. இன்று, கோடிக்கணக்கான மக்கள் 24/7 வங்கி சேவைகளை அணுக உதவும் லட்சக்கணக்கான ஏடிஎம்கள் இந்தியாவில் உள்ளன.



Click it and Unblock the Notifications
