Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 5 ராசிக்காரங்கள மத்தவங்க ரிஜெக்ட் பண்ணா....அவங்களால பொறுத்துக்கவே முடியாதாம்...!
ஒவ்வொரு மக்களுக்கும் சில பண்புகள் மற்றும் குணங்கள் இருக்கும். அது அவர்கள் வாழ்க்கையோடும் நடத்தையோடும் சம்பந்தப்பட்டிருக்கும். சிலர் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள், சிலர் மிகுந்த கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஓரிடத்தில் அல்லது ஒருவரால் நாம் புறக்கணிக்கப்படும்போது அது நமக்கு வருத்தமளிக்கும். அந்த நிலையை கடந்து நாம் வந்துவிடுவோம். ஆனால், சிலரால் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதை கோபமாகவோ அல்லது பழிவாங்கல் போன்ற முறையில் எதிர் நோக்குவார்கள்.

இராசி அறிகுறிகளின் அடிப்படையில், ஒருவர் புறக்கணிக்கும்போது அதை வெறுக்கும் நபர்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
மேஷம்
தன்னம்பிக்கை மற்றும் உறுதியான தன்மைக்காக மேஷ ராசிக்காரர்கள் அறியப்படுகிறார்கள். இயற்கையாகவே இவர்கள் தலைவர்களாக இருப்பதால், யாராலும் புறக்கணிக்கப்படுவதையோ அல்லது தவிர்க்கப்படுவதையோ விரும்புவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் மற்றும் கேட்க வேண்டும் என்ற தீவிர ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். அடிக்கடி தங்கள் மனதிற்குள் பேசும் இந்த ராசிக்காரர்கள், தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துவார்கள். இந்த ராசிக்காரர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணரும்போது, விரக்தியடைகிறார்கள். இதனால், மக்கள் தங்களை கவனிப்பதற்கான முயற்சிகளில் வெறித்தனமாக செயல்படுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் ஈர்ப்பு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் கவனத்தை விரும்புகிறார்கள் மற்றும் கவனத்தை ஈர்க்கிறார்கள். நடத்தைகளில் இயல்பான திறனைக் கொண்டுள்ள இந்த ராசிக்காரர்கள், எங்கு சென்றாலும் மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது தவிர்க்கப்பட்டதாகவோ உணரும்போது, அவர்கள் மனநிலை மாறக்கூடும். மேலும் அவர்கள் விரும்பும் கவனத்தைப் பெற மிகவும் கோபமாகவும் நடந்துகொள்ளலாம்.
தனுசு
வியாழனால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் நெருப்பு போன்றவர்கள். இந்த அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் நம்பிக்கையுடனும், சாகசத்துடனும், சுதந்திரமான மனநிலையுடனும் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் புதிய விஷயங்களை ஆராய்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் விரும்புகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் ஆர்வத்தை பகிர்ந்துகொள்ளும் நபர்களைச் சுற்றி இருக்க விரும்புகிறார்கள். இருப்பினும், தனுசு ராசிக்காரர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணரும்போது, அவர்கள் அமைதியற்றவர்களாகி, வெற்றிடத்தை நிரப்ப புதிய அனுபவங்களையும் சாகசங்களையும் செய்யலாம்.
மிதுனம்
நல்ல தகவல்தொடர்புகளை கொண்டுள்ள மிதுன ராசிக்காரர்கள், மற்றவர்களுடன் பேச அதிகம் விரும்புகிறார்கள். அவர்கள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதிலும் புதிய யோசனைகளை ஆராய்வதிலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணரும்போது, அவர்கள் அமைதியற்றவர்களாக மாறலாம். புதிய சமூக தொடர்புகள் அல்லது அனுபவங்களைத் தேடுவதன் மூலம் வெற்றிடத்தை நிரப்ப இவர்கள் முயற்சி செய்யவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அழகானவர்கள், நேசமானவர்கள் மற்றும் இராஜதந்திர குணம் கொண்டவர்கள். நண்பர்களை உருவாக்குவதற்கும் உறவுகளை வளர்ப்பதற்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இயல்பான திறமை உள்ளது. மேலும் அவர்கள் சமூகத்தில் பிரபலமான நபராக வளர விரும்புகிறார்கள். புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ இந்த ராசிக்காரர்கள் உணரும்போது, அவர்கள் பின்வாங்கலாம். மேலும், அவர்கள் விரும்பும் கவனத்தைப் பெறுவதற்கு சூழ்நிலைகள் அல்லது நபர்களைக் கையாளவும் முயற்சி செய்யலாம்.
இதர ராசிக்காரர்கள்
ரிஷபம், கடகம், கன்னி. விருச்சிகம், மகரம், கும்பம் மற்றும் மீனம் போன்ற ராசிக்காரர்கள் யார் தங்களை புறக்கணித்தாலும் கவலைப்படுவதில்லை. ஒருவரின் சரிபார்ப்பு அல்லது இருப்பு அவர்களுக்கு தேவையில்லை. அவர்கள் உறவில் இருக்கும்போது புண்படுத்தப்படலாம் மற்றும் புறக்கணிக்கப்படலாம். இருப்பினும், அவர்கள் ஒருவரின் கவனத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.



Click it and Unblock the Notifications


