வாங்குன கடனை திருப்பி கொடுக்கும் பழக்கம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு சுத்தமா இருக்காதாம்...உஷாரா இருந்துக்கோங்க!

கடன் கொடுப்பது மற்றும் வாங்குவது என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் இருக்கும் போது அது உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தத் தொடங்கும். பெரும்பாலான உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கு பணம்தான் பிரதான காரணாமாக இருக்கும்.

தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவருக்கு பணம் கொடுப்பதை விட அதனை திரும்ப வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் இந்த பழக்கத்தைக் கொண்டிருந்தாலும் சிலர் இதனை தங்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களிடம் செல்லும் பணம் எப்போதும் ஒருவழிப் பாதையாக இருக்கும்.

Which Zodiac Signs Borrow Money and Never Return in Tamil

இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல, ஜோதிடத்தின் படி அது அவர்களின் பிறந்த ராசியின் குணமாகவும் இருக்கலாம். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தைத் திருப்பித் தராமல் கடன் வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

இரட்டையர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மிதுனம், அதன் வசீகரமான மற்றும் இணக்கமான இயல்புக்கு பெயர் பெற்றது. மிதுன ராசிக்காரர்கள் இணைப்புகளை உருவாக்குவதில் சிறந்தவர்கள் என்றாலும், அவர்கள் நிதி விஷயங்களில் ஒழுக்கமாக இருக்கு கடுமையாக போராடலாம்.

அவர்களின் மனக்கிளர்ச்சி மற்றும் அடிக்கடி மாறும் இயல்பு அவர்களை உறவுகளின் தாக்கத்தை முழுமையாக உணராமல் பணத்தை கடன் வாங்க வழிவகுக்கும். ஆனால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்கும் வழக்கம் மிகவும் அரிதாகவே அவர்களிடம் காணப்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை பராமரிப்பதில் சிறந்தவர்களாக அறியப்படுகிறார்கள். இருப்பினும், சமநிலைக்கான இந்த ஆசை சில நேரங்களில் அவர்களின் நிதிநிலைக்கும் நீட்டிக்கப்படலாம்.

துலாம் ராசிக்காரர்கள் நேர்மை உணர்வைப் பேண வேண்டும் என்ற நோக்கத்தில் கடன் வாங்கலாம், ஆனால் அவர்களின் மறதி இயல்பு கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறையைத் தடுக்கலாம். ஒவ்வொரு முறையும் அவர்களிடம் கடனைப் பற்றி நியாபகப்படுத்தினால் மட்டுமே அவர்களிடம் கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள், நம்பிக்கை மற்றும் உற்சாகம் நிறைந்தவர்கள் மற்றும் சாகச உணர்வு நிறைந்தவர்கள், பெரிய திட்டங்கள் மற்றும் நோக்கங்களுக்காக அவர்கள் பணத்தை கடன் வாங்கலாம். இருப்பினும், அவர்களின் சுதந்திரமான மனப்பான்மை நிதிப் பொறுப்புகள் வரும்போது அவர்களை கவனக்குறைவானவர்களாக மாற்றிவிடும்.

இதனால் அவர்கள் வாங்கிய கடனை அலட்சியமாக நினைக்கலாம் மற்றும் கடனை திருப்பி செலுத்துவதை தவிர்க்க நினைக்கலாம். அவர்கள் கடனை திருப்பி செலுத்துவதற்குப் பதிலாக அதை தங்களின் அடுத்த சாகசத்திற்கான முதலீடாக பார்ப்பார்கள்.

மீனம்

ராசி சக்கரத்தில் அதிக கனவு காண்பவர்களான மீன ராசிக்காரர்கள், அவர்களின் இலட்சிய இயல்பு காரணமாக சில சமயங்களில் நிதி நெருக்கடிகளில் சிக்கிக் கொள்ளலாம். அவர்கள் சிறந்த நோக்கத்திற்காக பணத்தைக் கடன் வாங்கலாம், ஆனால் அதனை திருப்பி செலுத்துவதற்கான வழியை அவர்கள் அறியமாட்டார்கள்.

அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அதனை திருப்பி செலுத்துவதில் அவர்களுக்கு இருக்காது. அவர்களுக்கு பணம் கொடுத்தால் அதனை மீண்டும் பெறுவதை நீங்கள் மறந்து விடவேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களிடம் கடன் வாங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் தங்களின் தேவைகளுக்காக பெரிதும் அவர்களை நம்பியுள்ளார்கள். ஆனால் கடனை திரும்ப கேட்கும்போது மட்டும் மறைந்துவிடும் வழக்கம் அவர்களிடம் உண்டு. அதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் அன்பையும், அக்கறையையும் அள்ளிக் கொடுங்கள், ஆனால் அவர்களுக்கு கடன் மட்டும் கொடுத்து விடாதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, November 21, 2023, 16:47 [IST]
Desktop Bottom Promotion