Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் முட்டாள்தனமான முடிவெடுத்து அவதிப்படுவார்களாம்...இவங்ககிட்ட அட்வைஸ் கேட்ராதீங்க!
நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ எப்போதும் மோசமான முடிவுகளை எடுப்பது ஏன் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? சிலர் தவறான முடிவுகளை எப்போதும் சரியாக தேர்ந்தெடுப்பதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் மோசமான தேர்வுகளைச் செய்வதற்கான சரியான திறமை இருப்பதாகத் தெரிகிறது.
உங்கள் ராசி உங்களைப் பற்றியும் உங்கள் ஆளுமையைப் பற்றியும் நிறைய சொல்ல முடியும். ஆனால் இது உங்கள் முடிவெடுக்கும் திறனைப் பற்றியும் விளக்குகிறது. ஒவ்வொரு ராசியும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாக செயல்பட முனைகின்றன, இதனால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு அணுகுமுறைகள் உள்ளன. சில ராசிக்காரர்கள் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுப்பார்கள், ஏனெனில் அவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருப்பார்கள்.

சிலர் வாழ்க்கையில் எதார்த்த அணுகுமுறையைக் கொண்டுள்ளனர், இதனால் அவர்கள் எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள். இந்த பதிவில் பெரும்பாலும் மோசமான முடிவுகளை எடுக்கும் ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பொறுமையற்றவர்கள் மற்றும் அதிக மனக்கிளர்ச்சிக் கொண்டவர்கள். நிச்சயமற்ற அணுகுமுறையுடன் கலந்த தன்னிச்சையான ஆளுமையானது தவறான முடிவுகளை எடுப்பதற்கான சரியான செய்முறையை உருவாக்குகிறது. மேஷ ராசிக்காரர்கள் கடுமையான தலைக்கனம் கொண்டவர்கள், மேலும் வருந்துவதற்கு தாமதமாகும் வரை அவர்கள் முடிவுகளின் விளைவுகளை கருத்தில் கொள்ள மாட்டார்கள். அவர்களின் முடிவுகளின் விளைவுகளைப் பற்றி அவர்கள் எப்போதும் கவலைப்படுவதில்லை. அவர்கள் உடனடி திருப்தியை விரும்புவதால், அப்போதைக்கு திருப்தியை அளிக்கும் முடிவை மட்டுமே விரும்புகிறார்கள்.
மிதுனம்
மிதுனம் ஒரு இரட்டை ஆளுமை கொண்ட சிக்கலான ராசியாகும். அவர்களின் இரட்டை மனம் அவர்களை எப்போதும் குழப்பமான முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது. ஒரே விஷயத்திற்கு இரண்டு வகையான முடிவுகளை எடுப்பதால் எப்போதும் அவர்கள் குழப்பமான மனநிலையில் தவறான முடிவுகளை நோக்கி தள்ளப்படுகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். தன்னுடைய முடிவு சரியானதா? இல்லையா? என்பதை சிந்திப்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.
கடகம்
கடகம் மிகவும் உணர்திறன் கொண்ட ராசி அறிகுறிகளில் ஒன்றாகும். அவர்கள் திடீரென்று ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால், அவர்கள் பெரும்பாலும் தங்கள் உணர்ச்சி மற்றும் உணர்திறன் பக்கத்திற்கு இரையாகி, தவறான முடிவின் பக்கம் செல்கிறார்கள்.கடக ராசிக்காரர்களின்உணச்சிகரமான நடத்தை எதார்த்தமான மனநிலையில் சிந்திக்க அனுமதிக்காது, அவர்கள் ஒரு முடிவை எடுக்கும்போது எதிர்காலத்தப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
தனுசு
தனுசு ராசிகாரர்கள் மிகவும் தன்னிச்சையானவர்கள். திட்டமிடுவதில் நேரத்தை வீணாக்குவது அதன் சுவாரஸ்யத்தைக் குறைக்கும்என்று அவர்கள் நம்புகிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் விரைவான முடிவுகளை எடுத்து பிரச்சனையில் சிக்குவார்கள். கொஞ்சம் சிந்திப்பதால் வரப்போகும் பேரழிவைத் தடுக்கலாம் என்ற உண்மையை மறந்துவிடுகிறார்கள். தனுசு ராசிக்காரர்கல் மக்களை மகிழ்விப்பவர்கள். தனுசு ராசிக்காரர்கள் மக்களை சந்தோஷப்படுத்த மோசமான தேர்வுகளைச் செய்கிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் முடிவெடுப்பதில் மோசமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்கள் படைப்பாற்றலை மேம்படுத்த எப்போதும் ஆர்வமாக இருக்கிறார்கள். இதுவே அவர்களின் குழப்பமான சிந்தனைக்கு காரணம். இது மோசமான முடிவுகளை எடுப்பதற்கான பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. மீன ராசிக்காரர்கள் சில சமயங்களில் மற்றொருவரின் தூண்டுதல்களால் தவறான முடிவை எடுக்கலாம்.



Click it and Unblock the Notifications

