Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஈகோ ரொம்ப ஜாஸ்தியாம்... இவங்க கூட உறவில் இருக்குறவங்க ரொம்ப பாவமாம்!
ஒவ்வொரு நபருக்குள்ளும் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கும். இது அவர்களின் ஆளுமை பண்பு மற்றும் நடத்தையை வெளிப்படுத்த உதவும். பொதுவாக உறவுகளில் தம்பதிகளுக்குள் ஈகோ இருக்கக்கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில், ஈகோ நம் சுயத்தை மட்டுமல்லாது, சுற்றி இருப்பவர்களின் மகிழ்ச்சியையும் கெடுக்கும்.
எந்தவொரு நபரும் நிஜ வாழ்க்கையில் ஈகோ நடத்தைகளை வெளிப்படுத்த முடியும். இதுவும் மனிதர்களிடம் இருக்கும் ஒரு பண்பு. இருப்பினும், சிலர் அதிக ஈகோவோடு நடத்தைகளை வெளிப்படுத்தலாம். அவர்கள் தங்களைப் பற்றி ஒரு உயர்ந்த அதிர்வை உணர்கிறார்கள். இதனால், அவர்களின் துணை எப்போதும் அவர்கள் சொல்வதைக் கேட்பவராக இருப்பார் என்று நம்புகிறார்கள்.

ஒரு உறவில் ஈகோ நடத்தையை கையாள்வது ஒரு கட்டத்திற்குப் பிறகு மிகவும் மோசமாக உணர வைக்கலாம். எனவே அத்தகைய நபர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பன்னிரண்டு ராசிகளை நிர்ணயிப்பதன் மூலம் மக்களின் ஆளுமைகளின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள ஜோதிடம் நமக்கு உதவியாக இருக்கும். எனவே, உறவுகளில் மிகவும் ஈகோவோடு செயல்படக்கூடிய ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் போட்டி மற்றும் லட்சிய குணங்களை கொண்டுள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய வலுவான தேவையைக் கொண்டிருக்கலாம் மற்றும் உறவுகளில் சமரசத்துடன் இருக்க போராடலாம். இந்த ராசிக்காரர்களின் ஈகோ அதிகரிக்கும்போது, அவர்கள் மிகையான உறுதியானவர்களாகவும், தேவையுடையவர்களாகவும் மாறலாம். தங்கள் கூட்டாளியின் தேவைகளை விட தங்கள் சொந்தத் தேவைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாத குணத்திற்கு பெயர் பெற்றவர்கள். இவர்களின் ஈகோவை நீங்கள் சீண்டினால், அதன் பின்விளைவுகள் மோசமாக மாறும். உறவுகளில் அதிகப்படியான பொறாமை கொண்டவர்களாக மாறக்கூடும், மேலும் மாறுபட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்வது அல்லது சமரசம் செய்வது அவர்களுக்கு கடினம். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கான உரிமை உணர்வை வெளிப்படுத்தலாம் மற்றும் அவர்களின் தவறுகளை ஏற்றுக்கொள்ள தயங்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அச்சுறுத்தும் வகையில் ஈகோவை வெளிப்படுத்தலாம். இதனால், இவர்கள் தற்காப்புக்காக உறவுகளில் அதிகம் வாதிடுவார்கள். அவர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்பதைத் தவிர்க்கும் போக்கைக் கொண்டிருக்கலாம் மற்றும் தங்கள் துணையை குறை கூறுவது போன்ற ஈகோ நடத்தைகளில் ஈடுபடலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் நம்பிக்கை மற்றும் உறுதியான செயலுக்கு பெயர் பெற்றவர்கள். இருப்பினும், அவர்களின் ஈகோவைக் கட்டுக்குள் வைக்காதபோது, அவர்கள் அதிக சுயநலம் மற்றும் உறவுகளில் ஆதிக்கம் செலுத்தும் நபர்களாக மாறலாம்.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளர்களிடமிருந்து நிலையான சரிபார்ப்பு மற்றும் கவனத்தை நாடலாம். மேலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது பாராட்டப்படாதவர்களாகவோ உணர்ந்தால் அவர்களின் ஈகோ எளிதில் பாதிக்கப்பட்டு, வேறுமாதிரி அவர்கள் செயல்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய தீவிரமான ஆளுமை பண்பை கொண்டுள்ளனர். ஆனால் அது அவர்களின் ஈகோவுக்கு என்று வரும்போது, அவர்கள் உறவுகளில் அதிக சந்தேகத்தை கொண்டிருக்கலாம் மற்றும் பல விஷயங்களில் இரகசியம் காக்கலாம்.
இந்த ராசிக்காரர்கள் உறவில் வெறுப்புணர்வைக் கொண்டிருக்கலாம் மற்றும் அவர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதாக உணர்ந்தால் உங்களை பழிவாங்க நினைக்கலாம். இது உங்களை கையாளுதல் அல்லது நடத்தையை கட்டுப்படுத்துதல் போன்ற ஈகோ நடத்தைக்கு வழிவகுக்கும்.
இதர ராசிக்காரர்கள்
கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் உறவுகளில் மிகவும் புரிந்துணர்வுடன் இருப்பார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளரை உணர்ச்சி ரீதியாக காயப்படுத்த மாட்டார்கள். பொதுவாக அவர்கள் தங்கள் துணையை காயப்படுத்தாமல் இருக்க விஷயங்களை கவனமாக கையாள்வார்கள்.



Click it and Unblock the Notifications

