Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
முகலாயர்களாலும், ஆங்கிலேயர்களாலும் கைப்பற்ற முடியாத ஒரே இந்திய மாநிலம் எது தெரியுமா? இது தெரியாம போச்சே...!
இந்தியாவின் சுதந்திர போராட்டம் என்பது உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும். அகிம்சை வழியில் நீண்ட காலம் நடைபெற்று வெற்றியை அடைந்த உலகின் மிகப்பெரிய போராட்டம் இந்திய சுதந்திர போராட்டம்தான். முகலாயர்கள் 300 ஆண்டு காலம் இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த பின் வியாபாரிகளாக உள்ளே நுழைந்த ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் தொடங்கினர்.
இந்திய ஆட்சியர்களிடையே நிலவிய ஒற்றுமையின்மையால் விரைவில் ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் தங்கள் அதிகாரத்தை பரப்பினர். வர்ததகத்திற்காக வந்தவர்கள் அதன்பின் 200 ஆண்டுகள் இந்திய நிலப்பரப்பை ஆட்சி செய்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்திற்கு பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம் முழு கட்டுப்பாட்டையும் எடுத்து இந்தியாவை ஆளத் தொடங்கியது.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்ற பல இந்தியத் தலைவர்கள் சுதந்திரத்திற்காகப் போராட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இறுதியாக ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது.
முகலாயப் பேரரசு
கிழக்கிந்திய கம்பெனிக்கு முன்னர், இந்தியா முகலாயப் பேரரசால் ஆளப்பட்டது, இது 1526-இல் பாபரால் நிறுவப்பட்டது. 1857 ஆம் ஆண்டு கலகத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் ஆட்சியைக் கைப்பற்றி முகலாய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, முழு இந்தியாவின் மீதும் தங்கள் சொந்த ஆட்சியை நிறுவினர். கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபர், ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு பர்மாவிற்கு நாடுகடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், ஆங்கிலேயர்கள் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தனர். இருப்பினும், இவை அனைத்திற்கும் மத்தியில், முகலாயர்களால் தங்கள் ஆட்சியை நிறுவவோ அல்லது ஆங்கிலேயர்கள் நுழையவோ துணியாத ஒரு பகுதி நாட்டில் இருந்தது. அது தமிழ்நாடோ, நாகலாந்தோ அல்ல, அந்த இடம் இளைஞர்களின் கனவு இடமான கோவாதான்.
இந்தியாவில் முகலாயர்களோ அல்லது ஆங்கிலேயர்களோ கைப்பற்ற முடியாத ஒரே பகுதி கோவா. இருப்பினும், கோவா சுதந்திரமான மாநிலமாக இல்லை, அது போர்ச்சுகீசியர்களின் ஆட்சியில் கீழ் இருந்தது. அறிக்கைகளின்படி, போர்த்துகீசியர்கள் கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் கோவாவை ஆட்சி செய்தனர். இந்தியாவின் மற்ற பகுதிகள் சுதந்திரம் அடைந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகே கோவா சுதந்திரம் பெற்றது.
இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இருப்பினும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 19, 1961 அன்று கோவா போர்ச்சுகீசிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது, அதன் பிறகு அது அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. மார்ச் 1510 இல், அபோன்சோ டி அல்புகெர்க் தலைமையிலான போர்த்துகீசியர்கள் கோவாவை ஆக்கிரமித்து, அதிக எதிர்ப்பைச் சந்திக்காமல் அதைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். அதற்குப் பிறகு யாராலும் அவர்களிடமிருந்து கோவாவை கைப்பற்ற முடியவில்லை.
கோவா போலவே ஆங்கிலேயர்களாலும், முகலாயர்களாலும் கைப்பற்ற முடியாத மற்றொரு இடம் இருந்தது. அதுதான் தற்போதைய இந்தியாவின் அண்டை நாடான நேபாளம். நேபாளம் ஏன் ஒருபோதும் கைப்பற்றப் படவில்லை என்பதற்கு பல காரணிகள் உள்ளது. இமயமலை மலைகள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த அதன் புவியியல் நிலப்பரப்பு, நேபாளத்தை அணுகுவதை சவாலானதாக மாற்றியது, அந்நிய படையெடுப்புகளைத் தடுக்கும் இயற்கை தடைகளை உருவாக்கியது. மேலும் கூர்க்கர்களின் படையை எதிர்கொள்வது முகலாயர்களுக்கும் சரி, ஆங்கிலேயர்களுக்கும் சரி சவாலானதாக மாற்றியது. அவர்கள் நேபாளம் மீது படையெடுத்தபோதெல்லாம் அவர்கள் தோல்வியையே பரிசாகப் பெற்றனர்.



Click it and Unblock the Notifications
