Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
இந்தியாவில் அசைவ உணவுகள் அதிகமாக சாப்பிடும் டாப் 5 மாநிலங்கள்... தமிழ்நாடு எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா
உலகம் முழுவதும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிகமாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவு சைவ உணவு உண்பவர்களும் உள்ளனர். உலகில் அதிகளவு சைவ உணவு உண்பவர்கள் கொண்ட நாடாக இந்தியா அறியப்படுகிறது, ஆனால் அவர்களை விட அதிக எண்ணிக்கையில் அசைவ உணவு உண்பவர்களையும் கொண்டுள்ளது.
85 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அசைவ உணவை உட்கொள்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது, இது நாடு முழுவதும் உள்ள மக்களின் கலவையான உணவு விருப்பங்களைக் காட்டுகிறது. இந்தியாவின் கலாச்சாரம் மட்டுமல்ல உணவுமுறையிலும் வேற்றுமையில் ஒற்றுமை உள்ளது.

அசைவ உணவு அதிகம் சாப்பிடும் மக்கள் உள்ள மாநிலங்கள்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அசைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கையில் நாகாலாந்து முதலிடத்தில் உள்ளது, அதன் மக்கள்தொகையில் 99.8 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 99.3 சதவீதம் பேர் அசைவ உணவு உண்பவர்களாக இருக்கிறார்கள் 99.1 சதவீத மக்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதால் கேரளா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
98.25 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுவதால் ஆந்திரப் பிரதேசம் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது, 97.65 சதவீத மக்கள் அசைவ உணவுகளை, குறிப்பாக சிக்கன் பிரியாணியை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒடிசா ஆறாவது இடத்தில் உள்ளது, அதன் மக்கள் தொகையில் 97.35 சதவீதம் பேர் அசைவ உணவை விரும்பி உண்கிறார்கள்.
எப்படிப்பட்ட அசைவ உணவுகள் விரும்பப்படுகிறது?
வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தனிநபர் இறைச்சி நுகர்வு கணிசமாக அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. தென் மாநிலங்கள், அவற்றின் வளமான சமையல் பாரம்பரியங்களுக்கு பெயர் பெற்றவை, தென்னிந்தியர்கள் கடல் உணவுகள், சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றை விரும்பி உண்கிறார்கள்.
வட இந்தியாவில் சைவ உணவுகளின் ஆதிக்கம்
இந்தியாவின் பல மாநிலங்கள் அசைவ உணவுகள் சாப்பிடுவதில் முன்னணியில் இருந்தாலும் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் நுகர்வுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளன. இந்த மாநில மக்கள் முக்கியமாக சைவ உணவைக் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள், இங்குள்ள கலாச்சார மற்றும் மத பழக்கவழக்கங்கள் இதற்கு காரணமாக உள்ளன, மேலும் பால் அடிப்படையிலான உணவுகளை அவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
NSSO கணக்கெடுப்பு
NSSO இன் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் 2022-23 அறிக்கை இந்தியாவின் உணவு முறைகள் பற்றிய மதிப்புமிக்க கணிப்புகளை வழங்கியுள்ளது. கலாச்சார, காலநிலை மற்றும் பொருளாதார காரணிகளால் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் குறிப்பிடத்தக்க பிராந்திய வேறுபாடுகளை இது வெளிப்படுத்தியது. தென் மாநிலங்களும் வடகிழக்கு மாநிலங்களும் அசைவ உணவுகளில் அதிக விருப்பத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், வட மாநிலங்கள் பால் பொருட்களில் கவனம் செலுத்தி சைவ உணவுகளையே அதிகம் விரும்புகின்றன.



Click it and Unblock the Notifications
