11,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதலில் தோன்றிய பழம் எது தெரியுமா? இப்பவும் நாம இந்த பழத்தை சாப்பிடுறோமாம்

மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்க்கையில் பழங்கள் மிகவும் இன்றியமையாததாகும். பொதுவாக உலகின் மிகவும் பழமையான பழம் என்றால் வாழைப்பழம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் உலகின் மிகவும் பழமையான பழம் வேறொன்றாகும். உலகின் மிகவும் பழமையான பழம் சுமார் 11,200 முதல் 11,400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களால் பயிரிடப்பட்டு உட்கொள்ளப்பட்டது. இந்த பழம் பல நாகரிகங்களிலும், விவசாயத்தின் ஆரம்பகாலச் செயல்பாடுகளிலும் விவசாயம் மற்றும் உணவுப் பண்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது.

Which Fruit Is Known as the Oldest Fruit in the World

பண்டைய மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைக் கண்டறிய உலகின் பல நாடுகளில் விஞ்ஞானிகளும், வரலாற்று ஆசிரியர்களும் உலகின் மிகப் பழமையான பழங்கள், காய்கறிகள், தாவரங்கள் மற்றும் விவசாய முறைகள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் மற்ற பழங்களை விட நீண்ட வரலாற்றையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்ட, அதே வேளையில் உலகம் முழுவதிலும் உள்ள பண்டைய மதங்களுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட பழம் ஒன்று உள்ளது.

உலகின் மிகவும் பழமையான பழம் எது?

உலகின் மிகவும் பழமையான பழம் என்ற பெருமை அத்திப்பழத்திற்கு உரியதாகக். கருதப்படுகிறது அத்திப்பழம் உலகின் மிகப் பழமையான பழமாகக் கருதப்படுகிறது. 11,200 முதல் 11,400 ஆண்டுகளுக்கு முன்பே அத்திப்பழம் சாகுபடி செய்யப்பட்டதற்கான சான்றுகள், மனிதர்கள் சாகுபடி செய்த தொன்மையான பழ வகைகளில் இதுவும் ஒன்று என்பதை உறுதிப்படுத்துகின்றன.

2006 ஜூன் மாதத்தில், இஸ்ரேலின் ஜெரிகோ நகருக்கு அருகிலுள்ள கில்கால் I எனும் ஆரம்பகால புதிய கற்காலக் கிராமத்தில், 11,200 முதல் 11,400 ஆண்டுகள் பழமையான ஒன்பது புதைபடிவ அத்திப்பழங்களைக் கண்டறிந்ததாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் பார்-இலான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறிவித்தனர். அத்திப்பழம் எளிதாகப் பயிரிடக்கூடியதாகவும் இயற்கையாகவே இனிப்புச் சுவை கொண்டதாகவும் இருந்ததால், பண்டைய எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் மத்திய கிழக்கு மக்களிடையே இது ஒரு முக்கியமான பழமாகத் திகழ்ந்தது. பண்டைய மக்கள் அத்திப்பழங்களைப் பாதுகாத்து நீண்ட பயணங்களின்போது எடுத்துச் செல்வதற்காக அவற்றை உலர்த்திப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அத்திப்பழத்தின் நன்மைகள்

அத்திப்பழம் இனிப்புச் சுவை கொண்டவை மற்றும் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அத்திப்பழங்களை உண்பதன் உடலுக்குக் கிடைக்கும் முக்க்கியம்னா நன்மைகளில் ஒன்று செரிமானத்தை மேம்படுத்துவதாகும், ஏனெனில் இவற்றில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும், அத்திப்பழங்கள் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகவும் திகழ்கின்றன. இவை எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

Story first published: Tuesday, June 9, 2026, 22:03 [IST]
Desktop Bottom Promotion