இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் வினோத நாடு... இந்த நாட்டை விட்டு வெளிய போனாலே கண்டதும் சுட்டு விடுவார்களாம்...

இன்றைய உலகம் முழுக்க முழுக்க இன்டர்நெட்டை நம்பிதான் உள்ளது. நாம் ஒரு இடத்திற்கு செல்வதாக இருந்தாலும், ஒரு விஷயத்தைத் தேடுவதாக இருந்தாலும், ஏன் என்ன சாப்பிட வேண்டும், எந்த ஹோட்டலில் எது நன்றாக இருக்கும் என்பது முதற்கொண்டு நம் அன்றாட வாழ்க்கை முழுவதுமாக இணையத்தை நம்பிதான் நகர்கிறது.

நமது ஸ்மார்ட்போன்களில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான ஆப்கள் இணையத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியா மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளுமே இணையத்தைப் பயன்படுத்துகிறது. உலகம் முழுவதும் இணைய பயன்பாட்டில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், உலகில் இன்னும் இணைய அணுகல் இல்லாத Google என்றால் என்னவென்றே தெரியாத ஒரு விசித்திரமான நாடு உள்ளது.

Which Country Has No Access to Internet No TV Channels

ஆப்பிரிக்காவின் வட கொரியா

உலகிலுள்ள 195 நாடுகளில் எரித்திரியா நாட்டில் மட்டுமே அந்த நாட்டின் குடிமக்கள் அவர்களின் ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் பயன்படுத்த அனுமதி இல்லாத நாடு ஆகும். மொபைல் டேட்டா மற்றும் இன்டர்நெட் தொடர்பான தொழில்நுட்பங்கள் இந்த நாட்டில் மிகவும் அரிதாகவே உள்ளன. எரித்திரியா உலகின் மிகவும் ரகசியமான நாடுகளில் ஒன்றாகும். உலகில் பலரும் அறியாத எரித்திரியா கிழக்கு ஆப்பிரிக்காவில் செங்கடலில் அமைந்துள்ளது, இது ஜிபூட்டி, சூடான் மற்றும் எத்தியோப்பியாவின் எல்லையில் உள்ளது. எரித்திரியா சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ளது, இங்குள்ள கடுமையான விதிமுறைகளும், குடிமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் இந்த நாட்டை "ஆப்பிரிக்காவின் வட கொரியா" என்று அழைக்க வழிவகுத்துள்ளது.

எரித்திரியாவின் கலாச்சாரம்

எரித்திரியா 117,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் சுமார் 3.5 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. ஊடக அறிக்கைகளின் படி, எரித்திரியாவிற்கு அதிகாரப்பூர்வ மொழிகள் என்று எதுவுமில்லை. எரித்திரியா மக்கள் பொதுவாக டிக்ரின்யா, அரபு மற்றும் ஆங்கிலம் போன்ற பேசுகிறார்கள். குறிப்பிட்ட அளவிலான மக்கள் குஷிடிக் அல்லது ஆப்பிரிக்க-ஆசிய மொழிகளையும் பேசுகிறார்கள். எரித்திரியாவின் தலைநகரம் அஸ்மாரா. அஸ்மாராவில் பல தனித்துவமான இத்தாலிய கட்டிடங்கள் இருப்பதால் இது "சிறிய ரோம்" என்று அழைக்கப்படுகிறது.

Which Country Has No Access to Internet No TV Channels

எரித்திரியாவின் அரசியல் சூழல்

இந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, ஒருபோதும் தேர்தலை நடத்தவில்லை. 1993 முதல் இசயாஸ் அஃப்வெர்கி ஜனாதிபதியாக இருந்து வருகிறார். எரித்திரியா எத்தியோப்பியா மற்றும் இத்தாலியின் நீண்டகால ஆட்சியின் கீழ் இருந்தது. 1962 இல் எத்தியோப்பியாவால் எரித்திரியா இணைக்கப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பிறகு 1993 இல் சுதந்திர நாடாக மாறியது. சுதந்திரம் பெற்றது முதல் இசயாஸ் அஃப்வெர்கி ஜனாதிபதி பதவியில் இருக்கிறார்.

ஏன் இன்டர்ட்நெட் பயன்படுத்த முடிவதில்லை?

எரித்திரியாவின் மக்கள் தொகையில் சுமார் 1% பேர் மட்டுமே எப்போதாவது இணையத்தைப் பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. எரித்திரியாவில் மொபைல் டேட்டா சேவை இல்லை, மேலும் மக்களின் வீடுகளில் இணையத்தைப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் எதுவும் இல்லை. நாடு முழுவதும் கிளைகள் உள்ள ஒரு சில கஃபேக்களுக்கு மட்டுமே இணையவசதி அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி Wi-Fi வழியாக இணையத்தை அணுக இந்த கஃபேக்களுக்கு வருகிறார்கள். இருப்பினும், இந்த கஃபேக்களில் இணையத்தின் வேகம் மிகவும் மெதுவாக உள்ளது, உண்மையில் பெரும்பாலும் 2G ஐ விட குறைவாக உள்ளது.

எரித்திரியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த கஃபேக்களில் வசூலிக்கப்படும் கட்டணம் காரணமாக இணையத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியாது, ஏனெனில் அவை Wi-Fi பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு சுமார் 100 எரித்திரியன் நக்ஃபா (இந்திய மதிப்பில் 100 க்கு அதிகமாக) வசூலிக்கின்றன. நாட்டின் மோசமான பொருளாதார நிலை காரணமாக, மக்கள்தொகையில் குறிப்பிட்ட அளவிலான பகுதியினர் மட்டுமே இணையத்தை அணுக முடிகிறது.

எரித்திரியா ஆப்பிரிக்காவின் வட கொரியா என்று ஏன் அழைக்கப்படுகிறது?

எரித்திரியா ஆப்பிரிக்காவின் வட கொரியா என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் வட கொரியா போலவே எரித்திரியாவும் கடுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ளது, மேலும் அதன் குடிமக்கள் கட்டாய இராணுவ சேவையை செய்ய வேண்டும். எரித்திரியாவில் தனியார்மயம் என்று எதுவுமே இல்லை, மருத்துவமனைகள், விமான நிறுவனங்கள், போக்குவரத்து மற்றும் தொலைக்காட்சி அனைத்தும் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன.

எரித்திரியாவில் ஏடிஎம் சேவைகள் இல்லை, எனவே நீங்கள் எங்கு சென்றாலும் பணத்தை கையில்தான் எடுத்துச் செல்ல வேண்டும். பணம் இல்லாமல், நீங்கள் எதையும் வாங்க முடியாது. உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் எரித்திரியா கடைசி இடத்தில் உள்ளது. சுதந்திரமான செய்திகளும் இல்லை, சுதந்திரமான பத்திரிகையாளர்களும் இல்லை. இங்குள்ள ஒரே ஒளிபரப்பு சேவை அரசு நடத்தும் ஒரு தொலைக்காட்சி சேனல் மட்டுமே, மேலும் எந்த வெளிநாட்டு சேனல்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

அரசாங்க அனுமதியின்றி மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது. அப்படி வெளியேற முயற்சிக்கும் எவரையும் கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. எரித்திரியாவிற்கு சுற்றுலாப் பயணிகளின் அணுகலும் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது, அதனால்தான் இது உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்படும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Story first published: Sunday, August 17, 2025, 12:05 [IST]
Desktop Bottom Promotion