Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
எந்த நாளில் எந்த பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் கொட்டும்-ன்னு தெரியுமா?
நம் அனைவருக்குமே ஷாப்பிங் செய்ய பிடிக்கும். ஆனால் வேத ஜோதிடத்தின் படி, ஒருசில நம்பிக்கைகள் உள்ளன. அதில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் எந்த பொருட்களை வாங்க வேண்டும், எதை வாங்கக்கூடாது என்பது குறித்த சில நம்பிக்கைகள் உள்ளன.
அதாவது வாரத்தின் சில நாட்கள் சில பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். அதேப் போல் ஒருசில பொருட்களை வாங்கினால், அது துரதிர்ஷ்டத்தை ஈர்த்து, முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும்.

ஜோதிடத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்துடன் தொடர்புடையது. உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால் மற்றும் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க விரும்பினால், எந்த நாளில் எதை வாங்க வேண்டும், எதை வாங்கக்கூடாது என்பதை அறிந்து, அவற்றைப் பின்பற்றுங்கள்.
ஞாயிறு
ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவப்பு நிற பொருட்கள், தங்கம், கோதுமை, மருந்துகள், கத்திரிக்கோல், கண் தொடர்பான பொருட்களை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்நாளால் இரும்பு மற்றும் இரும்பினால் ஆன பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு மரப் பொருட்கள், வாகனத்தின் பாகங்கள் போன்வற்றையும் வாங்கக்கூடாது.
திங்கள்
திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் அரிசி, பாத்திரங்கள், தங்கம், மருந்துகள், பால் மற்றும் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்பு பொருட்களை வாங்கலாம். ஆனால் இந்நாளில் போனா, பென்சில், கலை தொடர்பான பொருட்கள், இசை தொடர்பான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மொபைல் போன்றவற்றை வாங்கக்கூடாது.
செவ்வாய்
செவ்வாய் கிழமை அனுமனுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த செவ்வாய்க்கிழமை அன்று தங்கம், சமையலறை பொருட்கள், சிவப்பு நிற பொருட்களை வாங்குவது நல்லது. சொத்துக்களை வாங்க நினைத்தால், அதை செவ்வாய் கிழமைகளில் வாங்குவது மங்களகரமானதாக இருக்கும். ஆனால் இந்நாளில் காலணிகளை வாங்காதீர்கள். அதோடு இரும்பு தொடர்பான பொருட்கள், பர்னிச்சர் மற்றும் மொபைல் போன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
புதன்
புதன்கிழமை விநாயகர் மற்றும் சரஸ்வதி தேவிக்கு உரிய நாளாகும். இந்த புதன் கிழமைகளில் பணம் தொடர்பான வேலைகளை செய்வது நல்லது. புதிய தொழில் மற்றும் படிப்பைத் தொடங்க சிறந்த நாள். இந்நாளில் பேனா, பென்சில், கலைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது அதிர்ஷ்டமானது. ஆனால் இந்நாளில் அரிசி, மருந்துகள், பாத்திரங்கள், மீன் தொட்டி போன்றவற்றை வாங்கக்கூடாது. மேலும் கடன் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
வியாழன்
வியாழக்கிழமை பகவான் விஷ்ணுவிற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவது மிகவும் நல்லது. அதேப் போல் இந்நாளில் சொத்துக்களை வாங்குவது நன்மை பயக்கும். ஆனால் இந்நாளில் கண்ணாடி, மஸ்காரா போன்றவற்றை வாங்கக்கூடாது. அதேப் போல் கூர்மையான பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் நீர் தொடர்பான ஷோபீஸ்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
வெள்ளி
வெள்ளிக்கிழமை செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உரிய நாளாகும். இந்நாளில் பணம் வைக்கும் பைகள், பெல்ட்டுகள், காலணிகள் போன்ற தோல் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. மேலும் இந்நாளில் அலங்கார பொருட்களை வாங்குவது மங்களகரமானது. ஆனால் இந்நாளில் சமையலறை மற்றும் பூஜை பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் வாகனத்தின் பாகங்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
சனி
சனிக்கிழமை சூரிய பகவானின் மகனான சனி பகவானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் வாகனங்கள், இயந்திரங்கள், ஹார்டுபேர், பர்னிச்சர், கருவிகள், கார்பெட் மற்றும் திரைசீலைகள் போன்வற்றை வாங்குவது மங்களகரமானதாகும். சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்று விரும்பினால், சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெய், உப்பு மற்றும் தோல் பொருட்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அதுமடுமின்றி, இரும்பு பொருட்கள், கத்தி, கத்தரிக்கோல், தானியங்கள், மசாலா பொருட்கள் போன்றவற்றை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications