Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
நியூமராலஜி படி, 2024 ஆம் ஆண்டின் அர்த்தம் என்ன? உண்மையில் எப்படி இருக்கும்?
New Year 2024: எப்படி கிரகங்கள் நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேப் போல் எண்களும் நமது வாழ்க்கையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் சில எண்கள் நமக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தாலும், சில சமயங்களில் சில எண்கள் துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கொண்டிருக்கும். அந்த எண்ணின் தாக்கம் அந்த ஆண்டு முழுவதும் இருக்கும். அப்படியிருக்க இன்னும் சில நாட்களில் 2024 புத்தாண்டிற்குள் நுழையவுள்ளோம். இந்த 2024 ஆம் ஆண்டிற்கு உரிய எண் 8. 2024-ல் ஒருவரது வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும், இந்த 8 ஆம் எண்ணுடனான உங்கள் விதி எண்ணின் உறவைப் பொறுத்தது.

எண் 8 ஆனது நல்லது, கெட்டது என அனைத்தையுமே கொண்டிருக்கும். எப்படி ஜோதிடத்தில் கிரகங்களுக்கு அதிபதிகள் உள்ளனரோ, அதேப் போல் நியூமராலஜியிலும் ஒவ்வொரு எண்ணிற்கும் அதிபதிகள் உள்ளனர். இப்போது 2024 ஆம் ஆண்டிற்குரிய எண்ணான 8, இந்த ஆண்டில் எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பதைக் காண்போம்.
2024 ஆம் ஆண்டிற்கான நியூமராலஜி கணிப்புகள்
2024 ஆம் ஆண்டின் கூட்டுத்தொகையின் ஒற்றை இலக்க எண் 8 (2+0+2+4=8). நியூமராலஜியின் படி, 8 ஆம் எண்ணின் அதிபதி சனி. ஆனால் இந்த 8 ஆனது 2 மற்றும் 4 ஆகிய எண்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது. அதாவது எண் 8 சந்திரன் (2) மற்றும் ராகுவால் (4) உருவாக்கப்பட்டது என்பதால், இந்த ஆண்டில் சனியின் தாக்கம் அதிகமாக இருக்காது.
இந்த ஆண்டானது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். எண் 8 ஒரு நிலைத்தன்மையின் காரணியாக இருந்தாலும், சந்திரன், ராகுவால் உருவாகியிருப்பதால், நிலையற்றதாக இருக்கும். பல துறைகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சோர்வாக இருக்கும்.
எண் 2
நியூமராலஜியின் படி, எண் 2-ன் அதிபதி சந்திரன். இதனால் இந்த எண்ணிற்கு உரியவர்களின் படைப்புத் திறன் அல்லது படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை முழுமையாக மதிப்பீர்கள். அவ்வறே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டுமென விரும்புவீர்கள். நீங்கள் வெளியே அமைதியான நபராக இருந்தாலும், சில சமயங்களில் மிகவும் விளையாட்டுத்தனமாக இருப்பீர்கள்.
எண் 4
நியூமராலஜியின் படி, எண் 4-ன் அதிபதி ராகு. இதனால் இந்த எண்ணிற்கு உரியவர்கள் வாழ்க்கையில் பல குழப்பங்களையும், திசைதிருப்பங்களையும் காணலாம். இருப்பினும் விரைவில் முன்னேற்றத்தைக் காணக்கூடும். வாழ்க்கையில் எதிர்பாராத பல விஷயங்கள் நடக்கும். புரட்சிகரமான ஒன்றை செய்ய தோன்றும். ஆனால் அதை நல்ல அனுபவசாலிகளின் உதவியுடன் செய்தால் மட்டுமே அது வெற்றி பெறும்.
எண் 8
நியூமராலஜியின் படி, எண் 8-ன் அதிபதி சனி. இதனால் இந்த எண்ணிற்கு உரியவர்கள் அனைத்து வேலைகளையும் பொறுமையாக செய்து முடிப்பீர்கள். நேர்மையானவர். எதையும் அவசரமாக செய்யமாட்டீர்கள். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும், அதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள் உங்களின் நேர்மையால் மற்றவர்கள் அதிகம் சிரமப்படுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications