Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
விண்வெளியில் நடந்த பிறகு விண்வெளி வீரர்களின் விரல்களில் இந்த பிரச்சனை வருமாம்.. ஏன் தெரியுமா?
விண்வெளிப் பயணம் என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இதற்காக ஒவ்வொரு விண்வெளி வீரர்களும் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டியிருக்கும். விண்வெளி பயணத்தில் அதிக அளவு அழுத்தங்கள் இருப்பதால் விண்வெளி வீரர்கள் அதற்கான நேர்த்தியான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.
அவர்கள் உடம்புக்கு மற்றும் கைக்கு என பிரத்யேக ஆடைகளை அணிந்தால் கூட பல நேரங்களில் அவர்கள் நிறைய பாதிப்புகளை சந்திக்கின்றனர். குறிப்பாக விண்வெளி வீரர்களின் நகங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது. விண்வெளி வீரர்களுக்கு எலும்பு மற்றும் தசை அடர்த்தி இழப்பு பிரச்சினை ஏற்படுகிறது. மூளையில் உள்ள அதிகப்படியான திரவத்தால் அவர்கள் பார்வை பிரச்சினைகளையும் சந்திக்கின்றனர்.

அதோடு சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. விண்வெளி பயணத்தின் போது விண்வெளி வீரர்களின் நகங்கள் உதிர்ந்து விடுகின்றன. அதாவது நகங்களில் ஓனிகோலிசிஸ் என்ற பிரச்சினை ஏற்படுகிறது. சரி வாங்க இந்த ஓனிகோலிசிஸ் பிரச்சினை பற்றி விரிவாக காண்போம்.
விண்வெளி சுற்றுப்புற அழுத்தம்
விண்வெளியில் மிகக் குறைவான அளவில் சுற்றுப்புற அழுத்தம் உள்ளது. அது மனித உடலுக்கு மிகவும் நல்லது கிடையாது. விண்வெளி வீரர்கள் உடலுக்கு பிரத்யேகமான ஆடைகளை அணிந்தால் கூட அவர்களுக்கு கைகளில் ஏற்படும் அழுத்தத்தால் அவர்களின் நகங்கள் நகப்படுகைகளில் பிரிந்து விடுகிறது.
அதே மாதிரி எக்ஸ்ட்ராவெஹிகுலர் செயல்பாட்டிற்கு (EVA) பயிற்சியளிக்கும் விண்வெளி வீரர்களிடையேயும் கைகளில் காயங்கள் ஏற்படுகின்றன. விண்வெளி வீரர்களின் கையுறைகள் அழுத்தப்படும் போது அவை பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்குகிறது. சில நேரங்களில் வலி, தசை சோர்வு, சிராய்ப்புகள் மற்றும் ஓனிகோலிசிஸ் போன்ற கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன.
தொடர்ச்சியான கையுறை தொடர்பான காயங்கள்
இன்றைய நவீன தொழில்துட்பத்தில் ஸ்பேஸ்சூட் வடிவமைப்பில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், ஓனிகோலிசிஸ் உட்பட கை காயங்கள் EVA களின் போது தொடர்ந்து ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 232 விண்வெளி வீரர்களின் கையில் காயங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனை மேலும் ஆராய்ந்த போது ஸ்பேஸ்சூட் கையுறைகளின் வடிவமைப்பு தாக்கம், ஓனிகோலிசிஸ் உட்பட கை காயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது கண்டறியப்பட்டது.
ஸ்பேஸ்சூட் கையுறைகள் சிக்கலானவை. அவை பல அடுக்குகளால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் ஓனிகோலிசிஸ் பிரச்சினையை சரி செய்யும் கையுறைகளை வடிவமைக்க முடியவில்லை. இந்த கையுறை பிரச்சினையால் விரல் நகம் இழப்பானது 8.5 மடங்கு அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
கையுறை அளவு மற்றும் நீளம் ஆகியவற்றின் தாக்கத்தால் நடுவிரல் காயங்கள் அதிகளவு ஏற்படுகிறது. மேலும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவு ஓனிகோலிசிஸ் பிரச்சினை ஏற்படுகிறது. அதே மாதிரி மோசமான கையுறை அல்லது பொருத்தமற்ற கையுறைகள் ஓனிகோலிசிஸ் பிரச்சினைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஸ்பேஸ்சூட் கையுறைகள்
ஸ்பேஸ்சூட் கையுறைகள் மிகவும் சிக்கலானவை. அவை குறைந்தபட்சம் நான்கு அடுக்குகளில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த கையுறையில் உள்ள ஒரு அடுக்கு தோலுடன் நெருங்கிய தொடர்பில் அமைகிறது. இதனால் தோலுக்கு அதிக அழுத்தத்தை இந்த கையுறைகள் கொடுக்கின்றன. இதனால் விண்வெளி வீரர்களின் நகங்கள் வீங்கி விறைக்கின்றன. காயங்கள் பொதுவாக இறுக்கமான கையுறைகளால் ஏற்படுகிறது.
இறுக்கமான கையுறைகள் விரல் நுனியில் இரத்த ஓட்டத்தை தடுக்கின்றன. விரல் நுனியில் ஏற்படும் நீடித்த அழுத்தத்தால் விரல் நகங்கள் உடைகின்றன. இதனால் நகங்கள் நகப் படுகையில் இருந்து பிரிந்து முழுவதுமாக உதிர்ந்து விடுகிறது. இதன் வெளிப்புற அடுக்கு தெர்மல் மைக்ரோமெட்டிராய்டு கார்மெண்ட் அடுக்கு ஆகும். இது ஸ்பேஸ்சூட் அணிபவரை விண்வெளியில் இருந்து பாதுகாக்கும். இந்த வெளிப்புற அடுக்கும் பல அடுக்குகளால் ஆனது.
ஸ்பேஸ்சூட் கையுறைகளின் வடிவமைப்பை மேம்படுத்த முயற்சி
ஸ்பேஸ்சூட் கையுறைகளின் வடிவமைப்பை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீரர்களின் விரல்களின் நீளத்திற்கு ஏற்ற வகையில் ஸ்பேஸ்சூட் கையுறைகள் வடிவமைக்க திட்டமிடப்பட உள்ளது. இதனால் காயங்கள் குறைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
