நீங்க எந்த கிழமை பிறந்தீங்க-ன்னு சொல்லுங்க... உங்கள பத்தி உங்களுக்கே தெரியாத ரகசியத்தை சொல்றோம்..

இவ்வுலகில் ஒருவர் பிறக்கும் போது, பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த கிழமை போன்றவை அந்நபரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதோடு, அவை அந்நபரின் குணாதியங்களைப் பற்றியும் வெளிப்படுத்துவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நியூமராலஜியில் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு, அந்த தேதிக்குரிய கிரக அதிபதிகளை வைத்து, அந்நபரின் குணாதியங்கள் கணித்து கூறப்படுகின்றன. அதேப் போல் ஒவ்வொரு கிழமையும், ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி தெரியப்படுத்தும்.

What Does Your Birth Day Reveals About Your Personality In Tamil

பிறந்த கிழமைப்படி, உங்களின் மற்றும் உங்களுக்கு பிடித்தவரின் உண்மையான குணாதிசயங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

திங்கள்

நீங்கள் திங்கட்கிழமைகளில் பிறந்தவரா? அப்படியானால் இந்த கிழமையில் பிறந்தவர்கள் தைரியமானவர்கள், எதற்கும் அஞ்சாதவர்கள். அதோடு சமூகத்தில் மிகவும் செல்வாக்குமிக்கவர்களாக இருப்பர். பெரும்பாலானோர் திங்கட்கிழமைகளில் மிகவும் சோம்பலை உணர்வார்கள். ஆனால் இவர்கள் இந்நாளில் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆற்றல் மிக்கவராகவும் இருப்பர். எந்த ஒரு விஷயத்தையும் இவர்கள் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். ஒரு வேலையை செய்ய இவர்கள் நன்கு திட்டமிட்டு, அதற்கேற்ப நடந்து வெற்றி பெறுவார்கள்.

செவ்வாய்

செவ்வாய் கிழமைகளில் பிறந்தவர்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள், நம்பிக்கையானவர்கள் மற்றும் அரிய குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு எந்த ஒரு மோசமான சூழ்நிலையிலும் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மிகவும் தைரியமானவர்களாக இருப்பர். வாழ்க்கையை சமநிலையில் நடத்துவார்கள். வரக்கூடிய சவால்களில் வெற்றி பெற தங்களுக்கென போதுமான நேரத்தை செலவிடுவார்கள். தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள். சிறு வெற்றிகளையும் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

புதன்

புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் சமநிலையான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடித்துவிடுவார்கள். மிகலம் வேகமானவர், நடைமுறைக்கேற்ப நடந்து கொள்பவர் மற்றும் திட்டமிட்டு வேலைகளை சிறப்பாக செய்யக்கூடியவர். தன்னிடம் கொடுக்கப்பட்ட வேலைகளை பொறுப்புடன் செய்வார்கள். இவர்களுக்கு எதையும் அவசரமாக செய்ய பிடிக்காது. எந்த ஒரு விஷயத்தையும் நன்கு பகுப்பாய்ந்து, பின்னரே முடிவுகளை எடுப்பார்கள்.

வியாழன்

வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள் தங்கள் சாதனைகள் மற்றும் வெற்றிகளால் பெருமிதம் கொள்வார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்வதோடு, அதை கொண்டாடவும் விரும்புவார்கள். கடந்த கால வெற்றிகளில் இருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு புதிய சவால்களை திறம்பட எதிர்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறி செல்வார்கள். இவர்களுக்கு ரிஸ்க் எடுக்க ரொம்பவும் பிடிக்கும்.

வெள்ளி

வெள்ளிக்கிழமைகளில் பிறந்தவர்கள் வேடிக்கையானவர்களாக, அன்பானவர்களாக இருப்பார்கள். தங்களுக்காக நேரத்தை அதிகம் செலவிட விரும்புவார்கள். வாழ்க்கை சாதாரணமாக செல்வதை உணர்வீர்கள். இந்நபர்களுக்கு நிச்சயம் திங்கட்கிழமை என்றால் பிடிக்காது. ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். இந்த கிழமைகளில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மிகவும் சந்தோஷமாக, சுறுசுறுப்பாக இருப்பார்கள். நிறைய பகல்கனவு காண்பார்கள். எப்போதும் தங்களுக்கு பிடித்த மாதிரி இருப்பார்கள் மற்றும் அதற்கேற்ப முடிவுகளை எடுப்பார்கள்.

சனி

சனிக்கிழமைகளில் பிறந்தவர்கள் எதையும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். வாரம் முழுவதும் இவர்கள் கடினமாக உழைப்பார்கள் மற்றும் சனிக்கிழமைகளில் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் யதார்த்தமானவர்கள். பகல்கனவு கண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களுக்கான இலக்குகளை நீங்களே அமைத்து, அதை அடைய முயற்சிப்பீர்கள். ஸ்மார்ட்டானவர்கள், கற்பனைத்திறன் கொண்டவர்கள் மற்றும் செய்யும் வேலையை முழு கவனத்துடன் செய்வார்கள். தங்களுக்கென நேரத்தை செலவிட விரும்புவார்கள்.

ஞாயிறு

ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள் நிகழ்காலத்தில் வாழவும், வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக அனுபவிக்கவும் விரும்புவார்கள். மேலும் இவர்கள் கவலையற்றவர்களாக, நம்பிக்கையானவர்களாக இருப்பர். கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ அதிகம் கவலைப்படமாட்டார்கள். இவர்கள் எப்போதும் புன்னகைமிக்க முகத்துடனே இருப்பார்கள். இவர்கள் ஓரிடத்தில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். ஒரு பிரச்சனை வந்தால், அப்போது பதட்டப்படாமல், பொறுமையாக இருந்து அந்த பிரச்சனைக்குரிய தீர்வை கண்டுபிடித்து சரிசெய்வார்கள்.

Story first published: Monday, October 30, 2023, 16:44 [IST]
Desktop Bottom Promotion