இந்த வாரம் எண் கணிதத்தின் அடிப்படையில் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது தெரியுமா?

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 28 May To 03 June 2023 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் உந்துதல் எண், சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.

மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது இந்த வாரத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1 (பிறந்த தேதி 1,10,19,28)

ஒன்றாம் எண்ணை கொண்டவர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம். உங்கள் தொழில் புதிய திசையில் நகரும். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களின் பணிகளும் அதிகரிக்கும். உங்களின் சரியான முடிவுகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இந்த நேரம் காதல் விஷயத்தில் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் மீது சரியான கவனம் செலுத்த முடியும்.

எண் 2 (பிறந்த தேதி 2,11,20,29)

இரண்டாம் எண்ணை கொண்டவர்களுக்கு வாரத்தின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களின் சில பெரிய பிரச்சனைகள் முடிவதால் கவலைகள் நீங்கும். சில நாட்களாக உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமாகக இருந்தால், இந்த வாரம் எல்லாம் சாதாரணமாகிவிடும். உத்தியோகஸ்தர்களுக்கு முக்கியமான மற்றும் பெரிய திட்டங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். வார இறுதியில், வேலை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் மிகப்பெரிய நிதி ஆதாயத்தைப் பெறலாம்.

எண் 3 (பிறந்த தேதி 3,12,21,30)

மூன்றாம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த வாரம் நல்ல திருமண வரன் தேடி வரலாம். விரைவில் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறலாம். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். வார இறுதியில், உங்களுக்கு பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இந்த நேரம் வேலையின் அடிப்படையில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் உடல் நலம் சீராகும். இருப்பினும், இரவு நீண்ட நேரம் விழித்திருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

எண் 4 (பிறந்த தேதி 4,13,22,31)

நான்காம் எண்ணை கொண்வர்கள் வேலை சம்பந்தமான எந்தவொரு முக்கியமான முடிவையும் அவசரமாக எடுக்காதீர்கள். இல்லையெனில், நஷ்டம் ஏற்படும். நீங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் சோர்வாகவும் மன அழுத்தத்துடனும் இருப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அமைதியான மனதுடன் செயல்பட முயற்சிப்பீர்கள். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும்.

எண் 5 (பிறந்த தேதி 5,14,23)

ஐந்தாம் எண்ணை கொண்டவர்கள் அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியரை அதிகமாக நம்புவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படும். இந்த நேரம் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் உறவை முன்னோக்கி கொண்டு செல்லவும் நீங்கள் முடிவு செய்யலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், வரவு செலவு கணக்குகளில் எந்த விதமான இடையூறும் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். இல்லையெனில், நிதி இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

எண் 6 (பிறந்த தேதி 6,15,24)

ஆறாம் எண்ணை கொண்டவர்கள், இந்த காலகட்டத்தில் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் வேலையுடன் சொந்தமாக தொழிலைத் தொடங்க விரும்பினால், நீங்கள் சிறந்த வாய்ப்பைப் பெறலாம். உங்கள் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும். இருப்பினும், பண விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய விஷயங்களுக்கு மட்டும் செலவு செய்யுங்கள். அவசர அவசரமாக எந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில், குழந்தைகளின் கல்வி தொடர்பான எந்த முக்கிய முடிவையும் நீங்கள் எடுக்கலாம்.

எண் 7 (பிறந்த தேதி 7,16,25)

ஏழாம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் பொறுமையுடன் வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி நேர்மறையாக இருக்க முயற்சி செய்யுங்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் நடத்தையும் உங்களிடம் சரியாக இருக்காது. தொழிலதிபர்கள், எந்தவொரு புதிய வணிக முன்மொழிவையும் ஏற்கும் முன்பு கவனமாக சிந்தியுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் உறவுகளில் இடைவெளி அதிகரிக்கும்.

எண் 8 (பிறந்த தேதி 8,17,26)

எட்டாம் எண்ணை கொண்டவர்கள், பண விஷயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். குறிப்பாக, ஆடம்பர செலவு செய்வது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். வேலையைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய முன்னேற்றப் பாதை திறக்கும். நீங்கள் சமீபத்தில் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரிந்திருந்தால், கடின உழைப்புக்கு ஏற்ற சரியான முடிவுகளைப் பெறலாம். வியாபாரிகளின் சிக்கிய ஒப்பந்தம் உறுதி செய்யப்படும். வார இறுதியில், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் நீங்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

எண் 9 (பிறந்த தேதி 9,18,27)

ஒன்பதாம் எண்ணை கொண்டவர்கள், இந்த காலகட்டத்தில் ஒரு புதிய தொடக்கத்தைப் பெறலாம். பழைய விஷயங்களை எல்லாம் மறந்து முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் முன்னேறுவீர்கள். அலுவலகத்தில் சில பெரிய மாற்றங்களைக் காணலாம். நீங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புள்ளது. சில புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களால் முடிந்ததை செய்ய முயற்சி செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில பெரிய வணிக முடிவுகளை எடுக்கலாம். வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரின் வருகை இருக்கலாம்.

Story first published: Sunday, May 28, 2023, 6:00 [IST]
Desktop Bottom Promotion