Latest Updates
-
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
சுக்கிரனின் ஆசியால் இந்த வாரம் இந்த 8 தேதிகளில் பிறந்தவர்களின் நிதி நிலை உயரப்போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 24 மார்ச் 2024 முதல் 30 மார்ச் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தில் சற்று நம்பிக்கை குறைவாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதில் நீங்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களுக்காக போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம். அதன் தாக்கம் உங்கள் நடத்தையில் தெரியும். சிறிய விஷயங்களுக்கு எரிச்சல் அடைவீர்கள். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரும். பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணம் தொடர்பாக ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கம் சற்று மந்தமாக இருக்கும். ஆனால் போகபோக வேலைகள் அனைத்தும் உங்கள் திட்டப்படியே முடிவடையும். உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் தினசரி வழக்கத்தை ஒழுங்கமைக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலையை வலுப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சில பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தமான பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் உங்கள் பிரச்சனை தீரும். நெருக்கமான ஒருவரிடமிருந்து பண உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பண விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. வேலையைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் முன்னேற வேண்டும். முன்னேற்றத்தைக் காண கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் தங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை மதிக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கலாம். வார இறுதியில் வேலை தொடர்பான பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் பயணம் மிகவும் லாபகரமாக இருக்கும். நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், இந்த வாரத்தில் நீங்கள் நிவாரணம் பெறலாம்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை இந்த வாரத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். உங்கள் குழந்தை தொடர்பான முக்கியமான முடிவையும் நீங்கள் எடுக்கலாம். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, உங்கள் வருமானத்தை மனதில் வைத்து மட்டுமே செலவு செய்ய வேண்டும். இதைத் தவிர, பணம் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையையும் செய்வதற்கு இந்த வாரம் சிறந்தது அல்ல. வணிகர்கள் வாக்குவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் இனிமையானதாக இருக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகள் சில புதிய வேலைகளைச் செய்யத் திட்டமிட்டால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் சில சுப காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய வருமானத்தைப் பெறலாம். காதல் துணையாக இருந்தாலும் சரி, வாழ்க்கை துணையாக இருந்தாலும் சரி, உங்களிடையே அன்பும் காதலும் நிலைத்திருக்கும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் சில பெரிய பொறுப்புகளை பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். தொழிலதிபர்கள் பெரும் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவராக இருந்தால், நல்ல வரன் அமையலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். மனதளவில் மிகவும் வலுவாகவும் இருப்பீர்கள்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும், அவசரமாகச் செய்யாமல் புத்திசாலித்தனமாகச் செய்ய முயலுங்கள். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் வேலையில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வேலையில் எந்த விதத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது. பண விஷயத்தில் இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் பட்ஜெட் சமநிலையற்றதாக இருக்கலாம். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதி ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அதிக பணத்தை சேமிக்க முடியும். வார இறுதியில் பணம் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். முக்கியமாக வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு இந்த வாரத்தில் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications