இந்த வாரம் எண் கணிதத்தின் அடிப்படையில் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது?

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 14 May To 20 May 2023 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் உந்துதல் எண், சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.

மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது இந்த வாரத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1 (பிறந்த தேதி 1,10,19,28)

ஒன்றாம் எண்ணை கொண்டவர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் திடீர் சரிவு ஏற்படலாம். இதன் காரணமாக மருத்துவமனைக்கு அதிகமாக சென்றுவர நேரிடலாம். வாரத்தின் நடுப்பகுதியில் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளவும் நேரிடும்.

வருமானத்தை அதிகரிக்க முயற்சிப்பவர்களுக்கு, இந்த காலகட்டத்தில் சில நல்ல செய்தி வந்து சேரும். புதிய வருமான ஆதாரத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை இந்த காலக்கட்டத்தில் பெற்றிடலாம். தேர்வில் நிச்சயம் வெற்றியைப் பெறுவார்கள்.

எண் 2 (பிறந்த தேதி 2,11,20,29)

இரண்டாம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த வாரம் சாதகமானதாக இருக்க போகிறது. புதிதாக தொடங்கிய வேலையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த வாரம், நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடித்து காட்டுவீர்கள்.

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவைப் பேண முயற்சிக்கவும். அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க கற்று கொள்ளுங்கள். பேசும் போது உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்துங்கள். காதலிப்பவர்கள், விரும்பிய துணையுடன் இணையலாம். உடல்நலம் சம்பந்தமான சில பிரச்சனை வரக்கூடும். நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எண் 3 (பிறந்த தேதி 3,12,21,30)

மூன்றாம் எண்ணை கொண்டவர்களுக்கு இந்த வாரம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு கல்வியில் சில தடைகள் ஏற்படலாம், படிப்பில் ஆர்வம் குறையலாம். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் இனிமையானதாக அமையும்.

உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு புதிய மற்றும் அழகான திருப்பம் ஏற்படக்கூடும். வேலையைப் பற்றி பேசினால், இந்த வாரம் நீங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறீர்கள். வேலையுடன், உங்கள் ஆரோக்கியம் மீதும் சிறிது கவனம் செலுத்துங்கள். இல்லையெனில், உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

எண் 4 (பிறந்த தேதி 4,13,22,31)

நான்காம் எண்ணை கொண்டவர்களுக்கு இந்த காலகட்டத்தில் செலவுகள் சற்று அதிகரிக்கலாம். நிதி நிலை நன்றாக இருந்தாலும் கூட, கவனமாகச் செலவு செய்யுங்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த உங்களது வேலையை, இந்தக் காலகட்டத்தில் முடிக்க வாய்ப்புகள் அதிகம்.

தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக அமையும். நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை நிச்சயம் பெற்றிடலாம். குடும்பத்தாருடன் ஏதேனும் மனகசப்பு இருந்துவந்தால், உங்கள் பக்கத்தை புத்திசாலித்தனமாக முன்வைக்க முயற்சிக்கவும். வீண் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

எண் 5 (பிறந்த தேதி 5,14,23)

ஐந்தாம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த வாரம் உடல்நிலை குறித்து கவலைகள் அதிகரிக்கும். பழைய நோய்கள் மீண்டும் தோன்றலாம். நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக உணர மாட்டீர்கள். வேலையில் சோம்பேறித்தனம் உங்கள் சிரமங்களை அதிகரிக்கும்.

வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் கவலையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். வார இறுதியில், நீங்கள் வேலை ரீதியாக ஒரு சிறப்பு நபரை சந்திப்பு கிட்டும்.

எண் 6 (பிறந்த தேதி 6,15,24)

ஆறாம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த வாரத்தின் தொடக்கம் மிகவும் சிறப்பானதாக அமையும். நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த வாரம் ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் வெற்றி பெறலாம்.

இந்த வாரத்தின் நடுப்பகுதியில் நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத்துணையின் மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் அளியுங்கள். ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிட முயற்சிக்கவும். இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த பொன்னான வாய்ப்பைப் பெற்றிடலாம்.

எண் 7 (பிறந்த தேதி 7,16,25)

ஏழாம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். உங்களின் காரணமில்லாத கோபம், உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் வாக்குவாதத்திற்கு வழிவகுக்கும். வீடு அல்லது அலுவலகம் எதுவாக இருந்தாலும், உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் கவனம் வேலையில் மிகவும் குறைவாக இருக்கும். இதனால், உங்கள் சில முக்கிய பணிகள் முழுமையடையாமல் போக வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடிதனமாக நம்பாதீர்கள்.

எண் 8 (பிறந்த தேதி 8,17,26)

எட்டாம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் பெரும் சரிவு ஏற்படலாம். நீங்கள் வயிறு தொடர்பான ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குடும்ப பிரச்சனைகள் குறித்த உங்கள் கவலை சற்றே அதிகரிக்கலாம்.

இந்த காலகட்டத்தில் வீட்டில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலை விஷயத்தில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு வெற்றி பெறுவதோடு, முன்னேற்றத்திற்கான புதிய பாதையும் உங்களுக்காக திறக்கும். வேலையில் உயர் பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வார இறுதி உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

எண் 9 (பிறந்த தேதி 9,18,27)

ஒன்பதாம் எண்ணை கொண்டவர்களுக்கு, இந்த வாரம் உங்களுக்கு பெரிய நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களின் நீண்ட கால கடின உழைப்பிற்கான நல்ல பலன் இந்த வாரம் கிடைக்கும்.

பண விஷயத்தில் நீங்கள் இந்த நேரம் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை வழங்குவீர்கள். உங்கள் துணையும் உங்களுக்கு சில முக்கிய வாக்குறுதியை அளிக்கலாம்.

Story first published: Sunday, May 14, 2023, 6:00 [IST]
Desktop Bottom Promotion