Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
Weekly Numerology: இந்த வாரம் இந்த 8 தேதிகளில் பிறந்தவர்களுக்கு சூப்பரா இருக்கப் போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 05 மே 2024 முதல் 11 மே 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் மரியாதை அலுவலகத்தில் அதிகரிக்கும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் போதுமான நேரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், இந்த வாரத்தில் சில முன்னேற்றம் காணப்படும்.
எண் 2
2,11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் மிகவும் ரொமான்டிக் ஆக இருக்கும். காதல் துணையாக இருந்தாலும் சரி, வாழ்க்கை துணையாக இருந்தாலும் சரி, இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலையை வலுப்படுத்த நீண்ட காலமாக முயற்சி செய்து கொண்டிருந்தால், இந்த வாரத்தில் நீங்கள் வெற்றி பெறலாம். இருப்பினும், நீங்கள் சிந்திக்காமல் எந்தவொரு நிதி முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் நல்ல வேலை கிடைக்கும். சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் உதவியைப் பெறலாம்.
எண் 3
3,12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் தாம்பத்திய வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். நீங்கள் புதிய சொத்து போன்றவற்றை வாங்க விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வார இறுதியில் வேலை நிமித்தமாக திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்களின் இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதில் தவறில்லை. குறிப்பாக இதய நோய் இருந்தால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
எண் 4
4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மிகவும் நன்றாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியலை அதிகரிக்க வேண்டாம். முக்கியமான பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இந்த வாரத்தில் கவனக்குறைவு உங்கள் முன்னேற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் சற்று சவாலாக இருக்கும். எளிதில் முடிக்கும் காரியங்கள் கூட தடைகளை சந்திக்க நேரிடும். வார இறுதியில் உடல்நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் தாம்பத்ய வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இந்த வாரத்தில் அவசரப்பட்டு செயல்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. எந்த முடிவை எடுப்பதற்கு முன்பும் கவனமாக சிந்தித்துப் பார்த்தால் நல்லது. மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வேலையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். வர்த்தகர்கள் பெரிய லாபம் சம்பாதிக்க விரும்பினால், கடினமாக உழைக்க வேண்டும். பணிபுரிபவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளை வழங்க வாய்ப்பு உள்ளது.
எண் 6
6,15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். திடீரென்று பணம் தேடி வரும். பணிபுரிபவர்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில், உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். இது தவிர, தவறுகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு இந்த வாரம் மிகவும் பரபரப்பான காலமாக இருக்கும். பல குறுகிய வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். காதல் விஷயங்களில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். திருமணமாகாதவர்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும்.
எண் 7
7,16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணம் தொடர்பான எந்த ஒரு பரிவர்த்தனையையும் செய்யும்போது அவசரப்பட வேண்டாம். திருமண வாழ்வில் மந்தமான நிலை ஏற்படும். உங்கள் அன்புக்குரியவர் உங்களை புறக்கணிக்க வாய்ப்புள்ளது. வார இறுதியில் நீங்கள் எதையாவது பற்றி மிகவும் கவலைப்படுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். சாமர்த்தியமான நடத்தையால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தொடர்பான ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், இந்த வாரத்தில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படலாம். திருமணமானவர்களுக்கு, இந்த வாரம் காதல் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நல்ல வெற்றி கிடைக்கும். கடின உழைப்பின் அடிப்படையில், உங்கள் எதிரிகளுக்கு நீங்கள் தகுந்த பதிலைக் கொடுப்பீர்கள். வெளியூர் சென்று வேலை செய்ய நினைத்தால், உங்கள் கனவு விரைவில் நிறைவேறும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். வார இறுதியில் பணமும் பெறலாம். சில தவறான புரிதல்களால் உங்கள் துணையுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். நல்ல ஆரோக்கியத்திற்கு, நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











