Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கும்...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 மார்ச் 24 ஆம் தேதி முதல் 2024 மார்ச் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். எதிர்பார்த்த பலன்கள் அனைத்தும் கிடைக்கும். வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் சாதகமான மாற்றத்தைக் காண்பீர்கள். இந்த வாரத்தில் சிறப்பான நபரை சந்திப்பீர்கள். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். தொழிலதிபர்களும் நல்ல லாபத்தைப் பெறலாம். குழந்தைகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பழைய நோயில் இருந்து விடுபடுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் தன்னம்பிக்கையுடன் செய்யும் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். புதிய வருமானத்தைப பெறுவீர்கள். மாணவராக இருந்தால், தேர்வில் சிறந்து விளங்குவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படும். பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். ஏற்கனவே வேலை செய்து கொண்டிருப்பவர்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் பிரச்சனையில் சிக்குவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கலந்தாலோசித்த பின்னரே எந்த முடிவையும் எடுப்பது நல்லது. செலவுகள் அதிகரிப்பதால் பணம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் இந்த வாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடன் சுமை அதிகரித்துவிடும். கோபம் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடினமாக இருக்கும். இந்த வாரத்தில் கோபத்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவுகளிலும் கசப்புகள் ஏற்படலாம். இந்த வாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பண பரிவர்த்தனைகளின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முதலீடுகளை செய்ய நினைத்தால், இந்த வாரத்தில் செய்யாதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் பிஸியாக இருக்கும். இந்த வாரத்தில் பொறுப்புகளின் சுமை அதிகரிக்கும். இதனால் திட்டமிட்டு எந்த வேலைகளையும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலையை மேம்படுத்தி சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இந்த வாரத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த வாரத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. இந்த வாரம் கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
