Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மறந்தும் புதன்கிழமைகளில் இந்த காரியங்களை செஞ்சுடாதீங்க.. இல்ல பெரிய நஷ்டத்தை சந்திப்பீங்க...
ஜோதிடத்தின் படி, மங்களகரமான புதன்கிழமைகளில் ஒருசில விஷயங்களை ஒருவர் செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது ஒருவரது வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Wednesday Activities: இந்து புராணங்களின் படி, நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் வாரத்தின் ஒவ்வொரு நாட்களுடன் இணைக்கப்படுகிறது. இதேப்போல் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கடவுளுடன் இணைக்கப்படுகிறது. அதில் புதன் கிரகத்தின் அதிபதி புதன் பகவான். இந்த புதன் பகவானை வழிபட சிறந்த நாளாக புதன்கிழமை கருதப்படுகிறது. மேலும் புதன்கிழமையில் புதன் பகவானைத் தவிர, விநாயாக பெருமானையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
அதுமட்டுமின்றி, எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு புதன்கிழமை சிறந்த நாளாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்தால், புதன்கிழமைகளில் விரதமிருந்து விநாயகரை வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் புதனால் சந்திக்கும் பிரச்சனைகள் குறைவதோடு, வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும்.

ஜோதிடத்தின் படி, மங்களகரமான புதன்கிழமைகளில் ஒருசில விஷயங்களை ஒருவர் செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது ஒருவரது வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது எந்த காரியங்களை புதன்கிழமைகளில் செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
1. புதன்கிழமைகளில் எவரும் தாய், தங்கை மற்றும் மகளை அவமதிக்கக்கூடாது. மேலும் பச்சை நிற ஆடைகள் அல்லது வளையல்களை பெண்களுக்கு தானம் செய்வது நல்லது.
2. புதன்கிழமைகளில் கடன் வாங்குவது மற்றும் கடன் கொடுப்பது கெட்டதாக கருதப்படுகிறது. இந்நாளில் கடன் வாங்கினால், அதனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது, இழப்புக்களே ஏற்படும். எனவே மறந்தும் புதன்கிழமைகளில் கடன் வாங்கிவிடாதீர்கள்.
3. புதன்கிழமைகளில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினால், அது ஜாதகத்தில் புதனை பலவீனமாக்கும். எனவே இந்நாளில் மற்றவர்களை திட்டுவதற்கு கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
4. புதன்கிழமைகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வேண்டுமானால், அதை வெள்ளிக்கிழமைகளில் செய்யுங்கள்.
5. திருநங்கைகளை புதன்கிழமைகளில் அவமதிக்கக்கூடாது. சொல்லப்போனால், இந்நாளில் அவர்களிடம் ஆசியை வாங்கினால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். முக்கியமாக இந்நாளில் திருநங்கைகளுக்கு உதவி செய்வது நல்லது.
6. புதன்கிழமைகளில் மேற்கு திசையை நோக்கி பயணம் மேற்கொள்வது கெட்டதாக கருமப்படுகிறது. உங்களின் வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிக்க வேண்டுமானால், புதன்கிழமைகளில் விநாயகரை வணங்கிவிட்டு தொடங்குங்கள்.
7. திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்க வேண்டுமானால், புதன்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். நற்பலன்கள் கிடைக்க பச்சை நிற ஆடைகளை அணிவதே நல்லது.



Click it and Unblock the Notifications