Latest Updates
-
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜனவரி 29 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Venus Transit In Pooradam Nakshatra On 29 January 2024: நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செல்வம், காதல், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் ராசியை மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார்.
அதில் சுக்கிரன் ராசியை மாற்ற 1 மாதம் ஆகும். அதேப் போல் நட்சத்திரத்தை மாற்ற 13 நாட்கள் ஆகும். இப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் சுக்கிரன் ஜனவரி 29 ஆம் தேதி பூராடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். தனது சொந்த நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால், இந்த நட்சத்திர பெயர்ச்சி சற்று சிறப்பானது என்றே கூறலாம்.
சுக்கிரன் நட்சத்திரத்தை மாற்றுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களின் ஆசை நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு நல்ல பாராட்டைப் பெறும். சிலர் பதவி உயர்வைப் பெறலாம். வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற கனவு நிறைவேறும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான நல்ல விஷயங்கள் நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த ஒருவரை சந்திக்கலாம். சிலர் ஏராளமான செல்வத்தைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியுடன், நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும் வணிகர்களும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக செய்து வந்த வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால், நிறைய பணத்தை சம்பாதிப்பதோடு, அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
