Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
Vastu Tips: தோஷங்களை நீக்கும் மயில் இறகுகள்.. வீட்டில் இந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டமாம்..!
நம் வீடுகளை அழகான அலங்காரங்களால் அலங்கரிப்பதை நாம் அனைவரும் ரசிக்கிறோம் அல்லவா? அது பூந்தொட்டியாக இருந்தாலும் சரி, ஓவியமாக இருந்தாலும் சரி, சுவர்கள் அல்லது அலமாரிகளில் நாம் விரும்பும் பொருள்கள் இடத்தின் அழகை அதிகரிக்கும். மயில் இறகு அத்தகைய ஒரு பொருள். பலர் அர்த்தம் புரியாமல் சுவரில் தொங்கவிடுகிறார்கள், மற்றவர்கள் தங்கள் வீட்டை அலங்கரிக்க மயில் இறகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
மயிலின் இறகு போல் அழகான பறவையின் இறகு வேறில்லை என்று கூறலாம். இந்த இறகுகள் ஒரே நேரத்தில் ஆயிரம் வண்ணங்களால் காட்சியளிக்கின்றன. முருகப் பெருமானின் வாகனமாகவும், கடவுளர் கிருஷ்ணரின் புல்லாங்குழலில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெருமையும் அளப்பரியதாக உள்ளது. வீட்டில் மயில் இறகுகள் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மயிலின் இறகை வீட்டில் வைத்திருந்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வாஸ்துப்படி, வீட்டின் குறிப்பிட்ட திசையில் மயிலிறகை வைத்திருப்பது பல அற்புதமான பலன்களை அளிக்கும். இப்போது வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் மயிலிறகை வைத்திருக்க வேண்டும்? அப்படி வைப்பதினால் எப்படி தோஷங்கள் விலகும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
செல்வத்தை பெருகும்:
வாஸ்து சாஸ்திரத்தின்படி, கிழக்கு திசையின் அதிபதிகள் சூரிய பகவான் மற்றும் இந்திரன். வீட்டின் கிழக்கு திசையில் மயில் தோகை வைப்பது அதிர்ஷ்டம். நீங்கள் அதை வடமேற்கே சுட்டிக்காட்டி வைக்கலாம். இந்த திசையில் மயிலின் இறகுகளை வைப்பதன் மூலம், நீங்கள் அதிக செல்வத்தைப் பெறலாம். விட்டில் நிதி சம்பந்தமான பிரச்சனைகள் வராது.
வீடுகளில் செழிப்பைக் கொண்டு வரும்:
வடமேற்கு திசையில் மயில் இறகுகளைப் வைப்பது சரியானதாகக் கருதப்படாவிட்டாலும், ஒருவரது ஜாதகத்தில் ராகு இருந்தால், இந்த திசை அவர்களுக்கு சாதகமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ராகுவின் தோஷம் நிவர்த்தியாகும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
வாஸ்து தோஷங்கள் நீங்கும்:
வீட்டில் மயில் தோகை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி 8 மயில் இறகுகளைக் கட்டி வடகிழக்கு சுவரில் வைக்க வேண்டும். இதனால் வாஸ்து தோஷம் முடிவுக்கு வரலாம். ஆனால், இறகுகளின் கொத்து எல்லோருக்கும் தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும். இது வீட்டிற்கு நேர்மறையையும் கொண்டு வருகிறது.
உங்கள் படிப்பு மேசையில் வைத்தால் நல்லது: வாஸ்து சாஸ்திரத்தின் படி, மயில் இறகுகள் உங்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட உதவும். இதற்காக மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் அல்லது படிக்கும் மேஜையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் மனது படிப்பில் அதிக ஈடுபாடு ஏற்படும்.
வீட்டு பிரச்சனைகள் தீரும்: வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் மயில் தோகையை அலங்காரத்திற்கு பயன்படுத்துவார்கள். இந்த மயில் இறகுகள் வீட்டிலுள்ள கெட்ட சகுனங்களைத் தடுக்கின்றன. வீட்டில் உள்ள பதற்றத்தை எளிதாக்குகின்றன. மாற்றத்தைக் காண உங்கள் பெட் ரூமில் கிழக்குச் சுவரில் ஒரு மயில் இறகை மாட்டி வைக்கவும்.



Click it and Unblock the Notifications