Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பர்ஸில் பணம் அதிகம் சேரணுமா? அப்ப 21 அரிசியை எடுத்து இப்படி வையுங்க.. அதிகரிக்கும்...
Vastu Tips In Tamil: என்ன தான் நல்ல சம்பளத்துல வேலை பார்த்து வந்தாலும், பர்ஸ் எப்பவும் காலியா தான் இருக்குதா? எவ்வளவு பணம் வந்தாலும், வர வேகத்திலேயே செலவாகிவிடுகிறதா? அப்படியானால் உங்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் அதிகம் சூழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. அதோடு, லட்சுமி தேவி உங்களின் செயல்களால் மகிழ்ச்சியடையவில்லை என்று அர்த்தம்.
நீங்கள் உங்கள் பர்ஸில் எப்போதும் நிறைய பணம் இருக்க வேண்டுமென்று விரும்பினால், ஒருசில வாஸ்து பரிகாரங்களை செய்யுங்கள். அப்படி செய்யும் பரிகாரங்களால் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைந்து, உங்களின் நிதி நிலையை உயர்த்துவார். இப்போது பர்ஸில் பணம் பெருக வாஸ்துப்படி எந்த பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

சோழி
உங்கள் பர்ஸில் பணம் நிலைத்திருப்பதில்லையா? அப்படியானால் 7 மஞ்சள் நிற சோழியை எடுத்து, உங்கள் பர்ஸில் வையுங்கள். இப்படி வைக்கும் போது, சோழியானது பர்ஸை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் மற்றும் பர்ஸில் பணம் அதிகம் சேர வழிவகை செய்யும்.
கோமதி சக்கரம்
உங்கள் பர்ஸ் எந்நேரமும் காலியாகவே உள்ளதா? என்ன செய்தாலும் பணம் சேராமல் செலவாகிக் கொண்டிருக்கிறதா? அப்படியானா கோமதி சக்கரத்தை வாங்கி பர்ஸில் வைத்திருங்கள். அதுவும் ஒற்றை படை எண்ணில் கோமதி சக்கரங்களை வாங்கி வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது, அது நிதி நிலையையும், மனநிலையையும் நிலையாக வைத்திருக்கும்.
ஸ்ரீயந்திரம்
ஸ்ரீயந்திர தகடை ஒருவரு தங்களின் பாக்கெட் அல்லது பர்ஸில் எப்போதும் வைத்திருப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த யந்திரம் இருக்கும் இடத்தில் நேர்மறை ஆற்றல் நிரம்பி இருக்கும். அதோடு இது ஒருவரது நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். முக்கியமாக இந்த யந்திரத்தை பர்ஸில் வைத்திருந்தால், அது பண வரவை அதிகரிக்கும்.
அரிசி
பண பிரச்சனையை சந்திப்பவர்கள் அல்லது பர்ஸில் எப்போதும் பணம் இல்லாமல் இருப்பவர்கள், இந்த அரிசி பரிகாரத்தை செய்வது நல்லது. அதற்கு ஒரு சிவப்பு நிற துணியில் 21 அரிசியை வைத்து, அதை பௌர்ணமி நாளில் சந்திரனின் ஒளி படும் இடத்தில் ஒரு 1 மணிநேரம் வைக்க வேண்டும். பின் அதை ஒரு மூட்டையாக கட்டி, பணம் வைக்கும் பர்ஸில் யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செலவு கட்டுப்படுத்தப்படுவதோடு, சேமிப்பு அதிகரிக்கும் மற்றும் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
லட்சுமி தேவியின் போட்டோ
செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் போட்டோவை பணம் வைக்கும் பர்ஸில் வைத்திருப்பது மிகவும் நல்லது. அதுவும் லட்சுமி தேடி அமர்ந்த நிலையில் உள்ள போட்டோவைத் தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் பர்ஸில் பணம் தங்கும் மற்றும் சேரவும் செய்யும்.
அரச மர இலை
அரச மரம் ஒரு புனிதமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அரச மரத்தின் இலையை பணம் வைக்கும் பர்ஸில் வைத்திருந்தால், பணம் அதிகம் சேரும் என்று கூறப்படுகிறது. அதுவும் அரச மரத்தின் இலையை கங்கை நீரில் கழுவி, அதன் பின் பர்ஸில் வைக்க வேண்டும். இப்படி வைத்தால் செல்வம் அதிகரிப்பதோடு, நிதி நிலையும் உயரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications