Latest Updates
-
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா?
கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கணுமா? அப்ப பெட்ரூம்-ல இந்த தவறுகளை செய்யாதீங்க..
Vastu Tips For Happy Marriage Life In Tamil: நமது வாழ்க்கையில் வாஸ்து சாஸ்திரம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் நாம் குடியிருக்கும் வீடு முதல் வேலை செய்யும் இடம் வரை, அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின் படி இருந்தால் மட்டுமே, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். இல்லாவிட்டால், வாழ்வில் வறுமையும், பிரச்சனையும் நிறைந்திருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளோரிடைய சண்டைகள், வாக்குவாதங்கள் போன்றவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்துள்ளது என்று அர்த்தம். எதிர்மறை ஆற்றல் நிரம்பிய வீடுகளில் வறுமை அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். மேலும் குடும்ப உறுப்பினர்களிடையே மனக்கசப்பு அதிகரிக்கும்.

அதுவும் கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள், சண்டைகள் போன்றவை அதிகமாக இருக்கிறது என்றால், அந்த வீட்டில் தம்பதிகளின் படுக்கை அறையில் வாஸ்து தோஷம் உள்ளது என்று அர்த்தம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், தம்பதிகளின் படுக்கை அறை வாஸ்துப்படி இருக்க வேண்டும். இப்போது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான வாஸ்து குறிப்புகளைக் காண்போம்.
படுக்கையறையில் இதை வைக்காதீர்
வாஸ்துப்படி, தம்பதிகளின் படுக்கையறையில் எப்போதும் மின்னணு சாதனங்களான கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்ற எதுவும் இருக்கக்கூடாது. இவ்வாறு வைத்தால், அது வாஸ்து தோஷயங்களை ஏற்படுத்தும். இதன் விளைவாக கணவன்-மனைவி இடையே சண்டைகளும், வாக்குவாதங்களும் தொடரும். எனவே உங்கள் படுக்கை அறையில் இப்பொருட்கள் இருந்தால், உடனே எடுத்துவிடுங்கள்.
இந்த மாதிரியான போட்டோக்களை வைக்காதீர்கள்
படுக்கையறையில் எப்போதும் மனதிற்கு அமைதியைத் தரும் போட்டோக்களைத் தான் வைக்க வேண்டும். அதைவிட்டு வன்முறை அல்லது போர் போன்றவற்றை சித்தரிக்கும் போட்டோக்களை படுக்கை அறையில் வைத்தால், அது கணவன் மனைவி இடையே சண்டைகளை அதிகரிக்கும். மேலும் படுக்கையறையில் தெய்வங்களின் போட்டோக்களையும் வைக்கக்கூடாது. அதற்கு பதிலாக காதலை உணர்த்தும் வகையிலான படங்களை வைக்கலாம். இந்த வகை படங்கள் தம்பதிகளிடையே காதலை அதிகரித்து, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
ஒன்றிற்கு மேற்பட்ட மெத்தை கூடாது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தம்பதிகளின் படுக்கையறையில் எப்போதும் இரண்டு மெத்தைகள் இருக்கக்கூடாது. இரண்டு மெத்தைகள் இருந்தால், அது கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கி, மோதல்களை அதிகரிக்கும். எனவே தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்க வேண்டுமானால், ஒரு மெத்தையை மட்டும் பயன்படுத்துங்கள்.
படுக்கை அறையில் கண்ணாடி கூடாது
நிறைய வீடுகளின் படுக்கையறையில் கண்ணாடி இருப்பதைக் காணலாம். ஆனால் வாஸ்துப்படி எப்போதும் படுக்கை அறையில் கண்ணாடியை வைத்திருக்கக்கூடாது. அதுவும் அந்த கண்ணாடியானது படுக்கையை பார்த்தவாறு இருக்கக்கூடாது. அப்படி தம்பதிகள் படுக்கையில் படுத்துக் கொண்டே கண்ணாடியை பார்த்தால், அது வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தி, தம்பதிகளிடையே சண்டைகளை அடிக்கடி வரவழைக்கும். ஒருவேளை கண்ணாடியை வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், தூங்கும் போது கண்ணாடியை ஒரு துணியால் மூடிவையுங்கள். இப்படி செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் ஏற்படாது மற்றும் தம்பதிகளின் உறவில் இனிமை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications