Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
உங்க வீட்டில் செருப்பை இந்த திசையில் வைச்சு இருக்கீங்களா? அப்ப உங்க பணக்கஷ்டம் எப்பவுமே தீராதாம்...!
வாஸ்து நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை எப்படி கொண்டுவருவது என்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதனுடன், வீட்டில் வைத்திருக்கும் பொருட்களின் திசை மற்றும் நிலை குறித்தும் வாஸ்து நம்மை வழிநடத்துகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பொருட்களை சரியான திசையில் வைக்காவிட்டால், அது நம் வாழ்க்கையை பாதிக்கும் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் காலணிகள் மற்றும் செருப்புகளை எப்படி, எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம். ஏனெனில் காலணிகள் நம் வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் இரண்டையுமே கொண்டுவரக்கூடியது.

காலணிகளுக்கான வாஸ்து குறிப்புகள்
காலணி மற்றும் செருப்புகளை ஒருபோதும் கவிழ்த்து வைக்க வேண்டாம். வாஸ்துவில் காலணிகளை வைப்பது குறித்து பல விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதகமான ஆற்றல் வீட்டிற்குள் நுழைய அனுமதிப்பதால், காலணிகள் மற்றும் செருப்புகளை ஒருபோதும் தலைகீழாக வைக்கக்கூடாது. இதனால் வீட்டின் மகிழ்ச்சியும், அமைதியும் குலைகிறது.
காலணிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக கழட்டக்கூடாது
பலர் அவசரத்தில் அங்கும் இங்குமாக காலணிகளை கழற்றுகிறார்கள். காலணிகளை இப்படி கழட்டி எறிவது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இதைச் செய்வதால் வீட்டிற்கு வறுமை ஏற்படுகிறது, மேலும் இதனால் குடும்பத்தினர் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
வடக்கு மற்றும் கிழக்கு திசையில் செருப்பை வைக்கக்கூடாது
வாஸ்து சாஸ்திரத்தின் படி வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதைச் செய்வது வீட்டிற்கு எதிர்மறை சக்தியைக் கொண்டுவருகிறது மற்றும் இந்த திசை லட்சுமி தேவிக்கு சொந்தமானது என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த திசையில் செருப்பு ஸ்டாண்ட் மற்றும் செருப்பை வைத்திருப்பவர்கள் மீது லட்சுமிதேவி கோபம் கொள்கிறார்.
ஷூ ஸ்டாண்டில் மட்டுமே காலணிகளை வைக்க வேண்டும்
காலணி மற்றும் செருப்புகளை எப்போதும் அதற்குரிய ஸ்டாண்டில் மட்டுமே வைக்க வேண்டும் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அதனால் அவை அங்கும் இங்கும் கழட்டி விடப்படுவதில்லை. இதனால் வீடும் சுத்தமாக தோற்றமளிக்கும். வாஸ்து படி, ஷூ ரேக் எப்போதும் தெற்கு திசையில் வைக்கப்பட வேண்டும்.
வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழட்டி விடக்கூடாது
வீட்டின் வாசலில் செருப்பு மற்றும் காலணிகளை குவியலாக வைத்திருப்பவர்கள் அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் வாஸ்து தோஷம் ஏற்படும். சத்தம் கேட்கும்படி வேகமாக காலணிகளை கழற்றுவது வீட்டிற்கு அசுபத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இதனால் வீட்டில் உள்ளவர்களிடையே மோதல் ஏற்படலாம்.
எந்த திசையில் வைக்க வேண்டும்?
வாஸ்து படி, காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசையில் வைக்க வேண்டும். இந்த திசையில் காலணிகளை வைத்திருப்பவர்கள், அவர்களின் வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும் மற்றும் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.



Click it and Unblock the Notifications

