Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இந்த 5 பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா அது வறுமையை ஏற்படுத்தும்...
Vastu Tips In Tamil: நம் ஒவ்வொருவரிடமும் நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால் அவற்றில் சில பழக்கங்கள் நமது வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். குறிப்பாக நமது நிதி நிலையை பலவீனப்படுத்தும் என்பது தெரியுமா?
ஆம், அதுவும் அந்த பழக்கங்கள் அனைத்தும் பெரும்பாலானோர் தினமும் கொண்டுள்ள பழக்கங்களாகும். இவை பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும், நம் வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தில் கூட இந்த பழக்கங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவர் செய்யும் சிறு தவறுகள் பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். இந்த தவறுகுள் ஒருவரது பழக்கங்களாகலாம் மற்றும் இந்த பழக்கங்கள் ஒருவரை ஏழையாக்கலாம். இப்போது ஒருவரை ஏழையாக்கக்கூடிய அந்த பழக்கங்கள் எவையென்பதைக் காண்போம். அந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், உடனே அவற்றை கைவிடுங்கள்.
இரவு நேரத்தில் நகம் வெட்டுவது
நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் மாலை மற்றும் இரவு நேரத்தில் நகம் வெட்டினால் திட்டுவார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இரவு நேரத்தில் நகங்களை வெட்டுவது மங்களகரமற்றதாக கருதப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் நகங்களை வெட்டினால், அது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வருவதோடு, பண இழப்பை ஏற்படுத்தும். இந்து நம்பிக்கைகளின் படி, மாலை வேளையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவார். அப்படி வரும் போது வீட்டில் நகங்களை வெட்டிக் கொண்டிருந்தால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி, செல்வ நிலையில் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
இரவு பாத்திரங்களை கழுவாமல் இருப்பது
இரவு நேரத்தில் தூங்கும் முன் சமையலறையில் அழுக்கு பாத்திரங்களை வைத்துவிட்டு தூங்குவீர்களா? இதுவரை உங்களிடம் இந்த பழக்கம் இருந்தால், இனிமேல் அதை கழுவிவிட்டு பின் தூங்க செல்லுங்கள். ஏனெனில் சமையலறையை அழுக்காக வைத்திருந்தால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மேலும் வீட்டில் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
காலணிகள் சிதறி கிடப்பது
சனியின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க வேண்டுமானால், செருப்பு மற்றும் ஷூக்களை ஆங்காங்கு சிதறி இருக்குமாறு வைக்காமல், ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும். பாதத்துடன் தொடர்புடைய அனைத்து பொருட்களுமே சனி பகவானுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. மேலும் பழைய அல்லது அறுந்துபோன செருப்புக்கள் வீட்டில் இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டின் செல்வ நிலை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உறவில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
நீரை வீணாக்குவது
ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு நீரை வீணாக்குகிறாரோ, அவ்வளவு பணத்தை செலவழிக்க நேரிடும். ஒருவேளை உங்கள் வீட்டில் உள்ள குழாயில் நீர் வடிந்தவாறு இருந்தால், அதை உடனே சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அதுவே வீட்டில் பண பிரச்சனையை வரவழைத்துவிடும்.
வீட்டின் பிரதான வாசலில் அமர்வது
பெரும்பாலானோர் மாலை வேளையில் வீட்டின் பிரதான வாசலில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்கள் அல்லது காற்று வாங்குவார்கள். ஆனால் வாஸ்துப்படி, வீட்டின் பிரதான வாசலில் அமர்வது மங்களகரமற்றதாக கருதப்படுகிறது. ஒருவேளை அவ்வாறு அமர்ந்தால், அந்நபர் பணப் பிரச்சனைளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதோடு பிரதான வாசலில் அமர்வது முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், உடனே அவற்றை கைவிடுங்கள். இல்லாவிட்டால் வறுமை உங்களை வாட்டி வதைத்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications