Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Varalakshmi Vratham: வரலட்சுமி விரதம் 2024 எப்போது? வழிபாடு மற்றும் பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்கள் இதோ!
ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம்.. வீட்டில் செல்வம் செழிக்கவும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் இந்த வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆனால் பெரும்பாலும் வீட்டில் பெண்களே செய்து வருகின்றனர்.. அந்த வகையில் இந்த வருடம் வரலட்சுமி விரதம் எப்போது? லட்சுமி தேவியை வழிபடுவதற்கு உகந்த நேரம் என்ன? வழிபடும் முறை என்ன? ஆகியவற்றை குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
வரலட்சுமி பூஜை எப்போது 2024?
வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு 2024, ஆடி மாதத்தின் நிறைவு நாளும், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையுமான ஆகஸ்ட் 16ம் தேதி வருகிறது. அன்றைய தினம் மகாவிஷ்ணுவிற்குரிய வளர்பிறை ஏகாதசி விரதமும் வருவது மற்றொரு தனிச் சிறப்பாகும். அன்றைய தினம் மூலம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. மூல நட்சத்திரம் என்பத அன்னை சரஸ்வதி தேவிக்குரிய நட்சத்திரமாகும். அதனால் இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளியில் விரதம் இருந்து வழிபட்டால் மூன்று தேவியர்களை வழிபட்ட பலனும், அவர்களின் அருளும் கிடைக்கும்..

வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவம்
வரலக்ஷ்மி பூஜை என்றும் அழைக்கப்படும் வரலக்ஷ்மி விரதம், ஆண்களும் பெண்களும் வரலக்ஷ்மி தேவியை வழிபடும் ஆடி மாத்த்தின் கடைசி நாளாகும்..லட்சுமி தேவி செல்வ செழிப்பின் அம்சமாகும்.. அவளை வழிபடுவதால் செல்வம், செழிப்பு, தைரியம், ஞானம் மற்றும் கருவுறுதல் ஆகியவை கிடைக்கும்.. பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகா லட்சுமி தேவியை நினைத்து இருப்பதுதான் இந்த வரலட்சுமி விரதம். மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தின் போது, பக்தர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஏராளமான ஆசீர்வாதங்களை பெறுவார்கள் என்பது நம்பிக்கை..
மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம்:
15 ஆகஸ்ட் 2024 - மாலை 6 மணி முதல் 8 மணி வரை
16 ஆகஸ்ட் 2024 - காலை 6 மணி முதல் 7:20 வரை
வரலட்சுமி பூஜை செய்வதற்கான உகந்த நேரம்:
16 ஆகஸ்ட் 2024 - காலை 9 மணி முதல் 10:20 மணி வரை. அது போல அன்று மாலை 6 மணிக்கு மேல்
புனர்பூஜை செய்வதற்கான உகந்த நேரம்:
17 ஆகஸ்ட் 2024 - காலை 7:35 மணி முதல் 8:55 மணி வரை. அதுபோல் அன்று காலை 10:35 மணி முதல் 12 மணி வரை
18 ஆகஸ்ட் 2024 - காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை. அதுபோல அன்று காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை
வரலக்ஷ்மி விரதம் எப்படி கொண்டாடப்படுகிறது?
வரலட்சுமி பூஜையை வியாழன், வெள்ளி, சனி என்று மூன்று நாட்கள் செய்யலாம். 3 நாட்கள் செய்ய முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை நாளில் செய்வது நல்லது. மகாலட்சுமியை வியாழக்கிழமை அழைத்து வெள்ளிக்கிழமை பூஜை செய்யப்படுகிறது. சனிக்கிழமை புனர்பூஜை செய்யப்படுகிறது.
திருமணமான பெண்கள் வியாழன் அன்று சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை விரதம் இருந்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். வெள்ளிக்கிழமையன்று பக்தர்கள் அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பாக தலைக்கு குளித்து, வீட்டை சுத்தம் செய்து ரங்கோலி போட்டு கலசத்தால் வரலட்சுமியை அலங்கரிப்பார்கள்..
கலசத்தில் சந்தனம் பூசப்பட்டு, அரிசி, நாணயங்கள், மஞ்சள் மற்றும் இலைகளால் நிரப்ப வேண்டும்.., பின்னர் ஒரு 'ஸ்வஸ்திகா' சின்னம் வரையப்பட வேண்டும்.. கடைசியாக, கலசத்தை மா இலைகளால் அலங்கரித்து, மஞ்சள் தடவிய தேங்காயை மூடி வைக்க வேண்டும். விநாயகப் பெருமானை வணங்கி, ஸ்லோகங்களைச் சொல்லி, ஆரத்தி செய்து, தெய்வத்திற்கு இனிப்புகளை வழங்குவதன் மூலம் பூஜை தொடங்குகிறது. பெண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் இழைகளைக் கட்டிக்கொண்டு பூஜையை தொடங்குவார்கள்..
புழுங்கலரிசி, பொங்கல் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகள் நிவேதமாக வைக்கப்படும்.. பக்தர்கள் சனிக்கிழமையன்று சடங்குகளை முடித்து, குளித்த பிறகு கலசத்தை அகற்றுகிறார்கள். வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடிப்பது அமைதி, செழிப்பு மற்றும் நிதி ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
மேலும் கலசத்தின் அருகில் குத்து விளக்கு ஏற்றுவது கூடுதல் சிறப்பு ஆகும்.
இந்த பூஜையை வெள்ளிக்கிழமை காலை 10.20 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். வரலட்சுமி பூஜை செய்யும் நேரத்தில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ள விரும்பும் பெண்கள் மாற்றிக் கொள்ளலாம்.
கடைபிடிக்க முடியாதவர்களுக்கு
சில பெண்கள் உடல் பிரச்னை காரணமாக இந்த வரலட்சுமி விரதத்தை வரும் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்க முடியாவிட்டால், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கலாம்.
அப்போதும் கடைப்பிடிக்க முடியாதவர்கள், நவராத்தி 9 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.. மகாலட்சுமியின் அருள் அப்போதும் பரிபூரணமாக கிடைக்கும்..



Click it and Unblock the Notifications
