Latest Updates
-
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இந்தியாவின் விசித்திரமான ரயில் நிலையங்கள்... இந்த ஸ்டேஷனில் நீங்க நிற்க கூட விசா வேணுமாம் தெரியுமா?
இந்தியர்களையும், ரயில்களையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட மற்றும் அதிக தூரத்தை கடக்கும் சக்திவாய்ந்த அமைப்பாக இந்திய ரயில்வே நிர்வாகம் உள்ளது. அதனால்தான் ரயில் பயணங்களை நம்பி கோடிக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் ரயில்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினராலும் அணுகக்கூடியதாகவும் மற்றும் விலை குறைவானதாகவும் இருக்கிறது.
தரவுகளின் படி, இந்தியாவில் 7308 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் சில ரயில் நிலையங்கள் மிகவும் தனித்துவமானவையாக இருக்கின்றன. சில ரயில் நிலையங்கள் அழகுக்காகவும், பல ரயில் நிலையங்கள் நீண்ட பயணத்திற்காகவும் பெயர் பெற்றவை. இந்தியாவின் சில தனித்துவமான ரயில் நிலையங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பவானி மண்டி ரயில் நிலையம்
பவானி மண்டி ரயில் நிலையம் டெல்லி-மும்பை ரயில் பாதையில் அமைந்துள்ளது. இது இரண்டு வெவ்வேறு மாநிலங்களுக்கும் இணைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த ரயில் நிலையம் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் இடையே தனித்துவமாக பிரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையேயான பிரிவின் காரணமாக, பவானி மண்டி ஸ்டேஷனில் நிற்கும் ஒவ்வொரு ரயிலும் ராஜஸ்தானில் அதன் என்ஜினும் பெட்டிகள் மத்திய பிரதேசத்திலும் இருக்கும். பவானி மண்டி ரயில் நிலையத்தின் ஒரு முனையில் ராஜஸ்தான் போர்டு நிறுவப்பட்டுள்ளது, மறுமுனையில் மத்திய பிரதேசத்தின் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அட்டாரி ரயில் நிலையம்
இது இந்தியாவின் மிகவும் ஸ்பெஷலான ரயில் நிலையமாகும். நீங்கள் அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து ரயிலைப் பிடிக்க அல்லது ஸ்டேஷனில் இறங்க விரும்பினால், உங்களிடம் விசா இருக்க வேண்டும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அமிர்தசரஸில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் விசா இல்லாமல் இறங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். விசா இல்லாமல் பிடிபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜார்கண்ட்டின் பெயரில்லாத ரயில் நிலையம்
ராஞ்சியில் இருந்து ஜார்கண்ட் தலைநகர் டோரிக்கு செல்லும் ரயில் பெயரிடப்படாத இந்த ரயில் நிலையத்தின் வழியாக செல்கிறது. இந்த ரயில் நிலையத்துக்கு பெயர் பலகை எதுவும் இல்லை. 2011 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்த நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கத் தொடங்கியபோது, இதற்கு பர்கிச்சம்பி என்று பெயரிட ரயில்வே நிர்வாகம் நினைத்தது, ஆனால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பால், இந்த நிலையத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
மேற்கு வங்காளத்தின் பெயரில்லாத ரயில் நிலையம்
மற்றொரு பெயரில்லாத இரயில் நிலையம் இப்போது முழுமையாக செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள பர்தமானில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள பங்குரா-மஸ்கிராம் ரயில் பாதையில் பெயரிடப்படாத ரயில் நிலையம் 2008 ஆம் ஆண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையத்திற்கு ஆரம்பத்தில் ராய்நகர் என்று பெயரிடப்பட்டது, ஆனால் உள்ளூர்வாசிகள் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றுமாறு ரயில்வே வாரியத்திடம் புகார் அளித்தனர். அப்போதிருந்து இந்த நிலையம் பெயர் இல்லாமல் இயங்கி வருகிறது.
நவாபூர் ரயில் நிலையம்
இந்தியாவின் தனித்துவமான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையத்தின் ஒரு பகுதி மகாராஷ்டிராவிலும் மற்றொன்று குஜராத்திலும் உள்ளது.
நவாப்பூர் ரயில் நிலையம் வெவ்வேறு மாநிலங்களில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அங்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் என்று இரண்டும் பிளாட்பாரம் முதல் பெஞ்ச் வரை எழுதப்பட்டுள்ளது, ஸ்டேஷனில் அறிவிப்புகள் இந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் குஜராத்தி ஆகிய 4 மொழிகளில் செய்யப்படுகின்றன.



Click it and Unblock the Notifications
