Latest Updates
-
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
Union Budget 2026:இந்தியாவின் 'கருப்பு' பட்ஜெட் என்று அழைக்கப்பட்ட பட்ஜெட் எது தெரியுமா?அப்போதைய பிரதமர் யார்?
Union Budget 2026: மத்திய பட்ஜெட் என்பது இந்தியாவின் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1 ஆம் தேதி, இந்தியாவின் நிதியமைச்சர் அடுத்த நிதியாண்டிற்கான நாட்டின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, அனைத்து இந்தியர்களும் இந்த பட்ஜெட்டில் தங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட் பற்றிய உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர ஸ்காட்லாந்தை சேர்ந்தவர்
இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது ஒரு இந்தியராகத்தான் இருப்பார் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், 1860 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது ஜேம்ஸ் வில்சன் என்ற ஒரு ஸ்காட்லாந்தை சேர்ந்தவர்தான். 1860 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி, அப்போதைய பிரிட்டிஷ் நிதி அமைச்சராக இருந்த வில்சன், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதிக முறை பட்ஜெட் சமர்ப்பித்தவர்
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சமர்ப்பிப்பு மூலம் 2019-லிருந்து தொடர்ந்து 9 முறை பட்ஜெட் சமர்பித்தவர் என்ற பெருமையை பெற்றாலும், இந்தியாவின் நிதி அமைச்சராக அதிக எண்ணிக்கையிலான பட்ஜெட்களைச் சமர்ப்பித்த சாதனை, நாட்டின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயிடமே உள்ளது. அவர் பத்து முறை பட்ஜெட்டைச் சமர்ப்பித்துள்ளார்.
கருப்பு பட்ஜெட்
பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையின் கீழ், இந்திய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் பி சவான் அவர்களால் 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், 'கறுப்பு பட்ஜெட்' என்று கருதப்படுகிறது. இதற்குக் காரணம், அந்த ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 550 கோடி ரூபாயாக இருந்ததே இதற்கு காரணமாகும். 1971 இந்தியா-பாகிஸ்தான் போருக்கும் 1972 வறட்சிக்கும் பிறகு, அந்த காலகட்டத்தில் இந்தியா கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தது.
இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர்
இந்தியாவின் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் ஆவார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1969-ல் மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்த பிறகு, நிதியமைச்சர் பொறுப்பைச் சிறிது காலம் ஏற்றுக்கொண்டு 1970-ல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தாலும், அது ஒரு முழுநேரப் பொறுப்பு அல்ல.
பட்ஜெட் தாக்கலின் தேதி எப்போதும் ஒரே தேதியில் இருந்ததில்லை
1999 ஆம் ஆண்டு வரை, மத்திய பட்ஜெட் எப்போதும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1999-ல், அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை மாலை 5 மணியிலிருந்து காலை 11 மணியாக மாற்றினார். பிறகு 2017-ல், அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளை பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளாகப் பயன்படுத்தும் பிரிட்டிஷ் கால மரபை மாற்றி, பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தொடங்கினார்.
மிக நீண்ட பட்ஜெட் உரை
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்த்திய பட்ஜெட் உரைதான், இந்தியாவின் வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையாகும். 2 மணி நேரம் 42 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த அந்த உரையை அவரால் முழுமையாக முடித்துவிட முடியவில்லை. உரையின் இறுதிக் கட்டத்தில் நிதியமைச்சர் சீதாராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இன்னும் இரண்டு பக்கங்கள் மீதமிருந்த நிலையில், அவர் உரையை பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்தது.
1997-ஆம் ஆண்டின் 'கனவு' பட்ஜெட்
1997-ஆம் ஆண்டு நிதியமைச்சர் பி. சிதம்பரம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், பெரிய சீர்திருத்தங்களுக்கான ஒரு வரைபடத்தை வகுத்ததால், 'கனவு பட்ஜெட்' என்று கருதப்படுகிறது. இந்த பட்ஜெட் தனிநபர்களுக்கான அதிகபட்ச வருமான வரி விகிதத்தை 40% இலிருந்து 30% ஆகக் குறைத்தது, சுங்க வரியை 50% இலிருந்து 40% ஆகக் குறைத்தது, மற்றும் கலால் வரி அமைப்பை எளிமைப்படுத்தியது என, 1997-ஆம் ஆண்டு பட்ஜெட் பல முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்தது.
பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர்கள்
இதுவரை இந்தியாவின் மூன்று பிரதமர்கள், குறுகிய காலத்திற்கு நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தங்கள் பதவிக்காலத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவி விலகிய பிறகு 1958-ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் 1970-ல், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, 1969-ல் மொரார்ஜி தேசாய் பதவி விலகிய பிறகு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 1987-ல், அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, தனது நிதியமைச்சர் வி.பி. சிங் பதவி விலகிய பிறகு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.



Click it and Unblock the Notifications












