Latest Updates
-
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 2 ராஜயோகங்கள்: மே 19 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
Two Rajyogas Made After 30 Years: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் கும்ப ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்து, சச ராஜயோகத்தை உருவாக்கி பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 19 ஆம் தேதி அசுரர்களின் குருவான சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இப்படி சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக உருவாகிறது.

இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும் மற்றும் அவரது முழு ஆதரவும் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதன் காரணமாக வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் பலரை ஈர்ப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகமானது நல்ல நிதி நன்மைகளை வழங்கும். வணிகர்களுக்கு நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். அதோடு புதிய வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த யோகங்களால் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். மீடியா, மாடலிங், ஃபேஷன் டிசைனிங் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
