Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
புத்தாண்டு முதல் நாளிலேயே ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை: இதுவரை அதிக சுனாமியை சந்தித்த நாடுகள்!
Tsunami Warning In Japan: 2024 ஆம் ஆண்டில் நுழைந்த முதல் நாளே ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியான இஷிகாவா மாகாணத்தில் சுமார் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி வருவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
மேலும் ஜப்பானின் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கடல்நீர் வரத் தொடங்கியுள்ளதால், கடற்கரையோர பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானில் சுனாமி வருவது ஒன்றும் புதிது அல்ல என்றாலும், இந்த முறை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது.

இயற்கை பேரழிவுகளிலேயே சுனாமி தான் மிகவும் மோசமான ஒன்று. இப்படிப்பட்ட சுனாமி உலகின் பல நாடுகளிலும் ஏற்பட்டு, விரைவில் மீள முடியாத அளவில் பொருட் சேதத்தையும், மில்லியன் கணக்கான உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேதமடைந்த பகுதிகளை பழுதுபார்ப்பதற்காக மில்லியன் கணக்கான டாலர்களும் செலவழிக்கப்பட்டன.
சரி, சுனாமி என்றால் என்ன? சுனாமி என்பது கடலுக்கடியில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளால் தூண்டப்படும் அலைகளின் தொகுப்பாகும். நிலச்சரிவுகள் அல்லது விண்கல் தாக்கங்கள் கூட சுனாமியைத் தூண்டலாம். இப்போது அதிக சுனாமியை சந்தித்த நாடுகள் எவையென்பதைக் காண்போம்.
ஜப்பான்
ஜப்பானில் இதுவரை 143 சுனாமிகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் மார்ச் 11, 2011 ஆம் தேதி வடக்கு பசிபிக் கடற்கரையில் ஏற்பட்ட சுனாமி தான் மறக்கவே முடியாது. ஏனெனில் இந்த சுனாமியின் தாக்கம் வட அமெரிக்கக் கடற்கரையில் கூட உணரப்பட்டது. இந்த சுனாமியின் போது 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சுமார் 19,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர் மற்றும் 400,000 க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். 2,556 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால் ஏற்பட்ட சேதம் 235 பில்லியன் டாலர்கள் என நிபுணர்கள் மதிப்பிட்டனர்.
இந்தோனேசியா
இந்தோனேசியா பூகம்பங்கள், வெள்ளம், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமிகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான அபாயங்களைக் கொண்ட பகுதியாக கருதப்படுகிறது. பல பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளை அனுபவிக்கும் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான "நெருப்பு வளையத்தில்" இந்தோனேசியா அமைந்துள்ளது. இந்த இந்தோனேசியாவில் மொத்தம் 77 சுனாமிகள் பதிவாகியுள்ளன. இதில் மறக்க முடியாத சுனாமி என்றால், அது 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட சுனாமி தான். இந்த சுனாமியின் போது சுமார் 2,00,000-க்கு அதிகமான மக்கள் இறந்தனர் மற்றும் 10 பில்லியன் டாலர் சொத்துக்கள் இழக்கப்பட்டது.
அமெரிக்கா
அமெரிக்காவிலும் சுனாமி வந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் சுமார் 74 சுனாமிகள் வந்துள்ளன. அதில் கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் ஆகிய மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஏற்பட்ட அலாஸ்கா/ஹவாய் சுனாமி, அமெரிக்காவில் ஏற்பட்ட மிக மோசமான சுனாமிகளில் ஒன்றாகும். அப்போது அலாஸ்காவின் சிறிய சேதம் ஏற்பட்டாலும், ஹவாயில் 4.2 பில்லியன் டாலர்கள் சேதமும், 159 பேரும் இறந்துள்ளனர்.
இத்தாலி
இத்தாலியில் இதுவரை 71 சுனாமிகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், அதில் 1908 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மிகவும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த சுனாமியானது மெசினாவில் நிகழ்ந்தது, மேலும் நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக இருந்தது. சுனாமியானது 40 அடி அலைகளைக் கொண்டு வந்தது. இந்த சுனாமியின் போது சுமார் 80,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிலி
சிலியின் சுமார் 44-க்கும் அதிகமான சுனாமி நிகழ்ந்துள்ளது. அதில் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ம் தேதி 8.2 ரிக்டேர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. அப்போது 4 ஆண்களும், 1 பெண்ணும் இறந்தனர் மற்றும் அப்பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இது தவிர 2014 ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் பல சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அப்போது 150 பேர் மரணமடைந்தனர். மேலும் சுமார் 400,000 வீடுகள் அழிந்தன.
கிரீஸ்
சுனாமி அதிகம் ஏற்பட்ட ஏற்பட்ட நாடுகளில் கிரீஸும் ஒன்று. இதுவரை கிரீஸில் 25 சுனாமிகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கம் மோசமானதாக கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கம் கிரேக்க தீவான சமோஸின் வடகிழக்கில் ஏற்பட்டது. மைன்ஷாக் ஏற்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு சுனாமி ஏற்பட்டது. அந்த சுனாமி நீரால் அஸ்மாக், அசாரியா மற்றும் சிகாசிக் போன்றவை நீரில் மூழ்கின. அந்த சுனாமியில் 119 பேர் இறந்தனர் மற்றும் 15,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மொத்தம் 400 மில்லியன் டாலர்கள் சேதமடைந்தன.
பெரு
பெருவில் இதுவரை ஏராளமான சுனாமிகள் நிகழ்ந்துள்ளன. அதில் 2001 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நிகழ்ந்த சுனாமி, கணிசமான சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது 3,000-க்கும் அதிகமான மக்கள் இறநதனர், 62 பேர் காணாமல் போனிர். பெருவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மெக்ஸிகோ, கலிபோர்னியா, ஹவாய், அலாஸ்கா, பிஜி, சமோவான் தீவுகள், டோங்கா மற்றும் ரஷ்யா போன்ற பிற பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.



Click it and Unblock the Notifications











