Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
எந்த மாநில பெண்கள் அதிகமாக மது அருந்துகிறார்கள் தெரியுமா? இதுல தமிழ்நாட்டு பெண்களும் இருக்காங்களா?
பொதுவாக பார்ட்டி, விழாக்கள், பண்டிகைகள் என்று எந்த கொண்டாட்டமாக இருந்தாலும், மது அருந்துவது வழக்கமாக உள்ளது. முன்பெல்லாம் ஆண்கள் தான் கொண்டாட்ட காலங்களில் ஆல்கஹாலை அதிகம் அருந்தினார்கள். ஆனால் தற்போது பெண்களும் ஆண்கள் இணையாக வெளிப்படையாக குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
உலகின் மதுபானங்களுக்கான சந்தையில் இந்தியா மூன்றாவது பெரிய சந்தையாகும். மேலும் இந்தியர்கள் முன்பை விட அதிகமாக குடித்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு அரசு நடத்திய ஆய்வில், 10-75 வயதிற்குட்பட்ட இந்தியர்களில் 7 பேரில் ஒருவர் மது அருந்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவான நகரமயமாக்கல், அதிகரித்து வரும் வருமானம், எளிதில் மது கிடைப்பது மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவை இந்தியர்கள் அதிகமாக மது அருந்துவதற்கு காரணங்களாக உள்ளன.

அதுவும் இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக மது அருந்துகின்றனர். 2019-21-க்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS-5), பெண்கள் அதிகம் மது அருந்தும் மாநிலங்களை வெளிப்படுத்தியுள்ளது. கீழே எந்த மாநிலங்களில் உள்ள பெண்கள் அதிகமாக மது அருந்துகிறார்கள் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்
2000 ஆம் ஆண்டு நவம்பர் அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இம்மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூர். NFHS-5 தரவுகளின்படி, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் சுமார் 4.9 சதவீத பெண்கள் மது அருந்துகின்றனர்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும். மேலும் இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமும் கூட. இது வறண்ட பகுதி அல்ல. இங்கு மது பானங்களுக்கு அனுமதி உண்டு. NFHS-5 தரவுகளின்படி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுமார் 5 சதவீத பெண்கள் மதுவை அருந்துகின்றனர்.
ஜார்கண்ட்
2000 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். இந்த ஜார்கண்டில் சுமார் 6 சதவீத பெண்கள் மதுவை அருந்துவதாக NFHS-5 தரவுகளில் தெரிய வந்துள்ளன.
தெலுங்கானா
தெலுங்கானா என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது ஆந்திராவில் இருந்து 2014 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக செயல்படத் தொடங்கியது. இந்த தெலுங்கானா மாநிலம் மதுபானம் மூலம் 40,000 கோடி ரூபாயை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இம்மாநிலத்தில் 6.7 சதவீத பெண்கள் மது அருந்துகின்றனர்.
அஸ்ஸாம்
அஸ்ஸாம் இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மாநிலமாகும். இதன் தலைநகர் திஸ்பூர். NFHS-5 தரவுகளின்படி, அஸ்ஸாம் மாநிலத்தில் மது அருந்தும் பெண்களில் சுமார் 7.3 சதவீதம் பேர் உள்ளனர்.
சிக்கிம்
சிக்கிம் இமயமலையின் ஒரு பகுதியாகும். இது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம். இது பூட்டான், திபெத் மற்றும் நேபாளத்தின் எல்லையாக உள்ளது. இந்தியாவில் மது அருந்தும் பெண்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சிக்கிம் உள்ளது. இங்கு சுமார் 16.2 சதவீத பெண்கள் மது அருந்துகின்றனர்.
அருணாச்சல பிரதேசம்
'விடியல்-ஒளி-மலைகளின் நிலம்' என்று அறியப்படும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் தொலைதூர மாநிலம். NFHS-5 தரவுகளின்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் மது அருந்தும் ஆண்கள் (53%) மற்றும் பெண்கள் (24%) என்ற விகிதத்தில் உள்ளனர். இந்தியாவிலேயே மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகம்.



Click it and Unblock the Notifications